பசுவோட உடம்பில் கோடானுகோடி தேவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்கிறார்களே! அப்போ அந்த பசுவுக்கு கோமாரி நோயோ அல்லது ஆந்ராக்ஸ் கிருமியோ தாக்கும்போது ஏன் அந்த தேவர்கள் அந்த கிருமிகளை அழிப்பதில்லை? லூயி பாஸ்டியரோட மருந்துதானே அந்த மாடுகளை காப்பாற்றுகிறது? எனில் அந்த தேவர்களைவிட லூயி பாஸ்டியர் உயர்ந்தவரா? ஒரு வேளை மேற்படி நோய்களினால் அந்த பசுக்கள் சாக நேரிட்டால் அதன் உடலில் குடியிருக்கும் கோடானு கோடி தேவர்களும் செத்து மடிவார்களா? அல்லது இன்னொரு பசுவின் உடலில் புகுந்து கொள்வார்களா?
– ராஜேஷ் தீனா | மார்ச் 8, 2012 காலை 9:26 மணி
திருவிழாக்கூட்டங்களில் கடவுள் படங்களைவிட அதிகம் விற்பனையாகும் படங்கள் எதுவென்றால் என்னைப்பார் யோகம் வரும் என்று எழுதியிருக்கிற கழுதை படமும், என் முகத்தில் விழி அதிர்ஷ்டம் வரும்ன்னு போட்டிருக்கிற நரி படமும்தான். ஆனா தினந்தோறும் கழுதை முகத்தில் விழித்து கழுதையோடவே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிற வண்ணான் எனப்படும் சலவைத்தொழிலாளியின் வாழ்க்கை பாவம் அப்படியேதான் இருக்கிறது. தினந்தோறும் நரியின் முகத்தில் விழிக்கிற நரிக்குறவன் இன்றும் நரிக்குறவனாகவே இருக்கிறான்.
– ராஜேஷ் தீனா | மார்ச் 10, 2012 காலை 6:44 மணி
ஒவ்வொரு ஃப்ரண்டும் தேவை மச்சான் | மார்ச் 21, 2012 மாலை 6:38 மணி-
என்னதான் வெளிநாட்டுலருந்து வண்டிய இறக்குமதி பண்ணாலும், அதுக்கு பூஜை போடுற மேட்டரை இந்தியன் தான்டா கண்டுபுடிச்சான்.. டேய்.. உள்ள இருக்கிற 525 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா இந்த எலுமிச்சம்பழத்தில ஓடப் போகுது?
– சரத்குமார் | மார்ச் 11, 2012 இரவு 10:32 மணி
2013 நாள்காட்டி
– கோயம்புத்தூர் சூனா பானா | மார்ச் 13, 2012 இரவு 10:13 மணி
இணையத்தில் அய்ந்து தலை நாகம், பத்து தலை நாகம் என்று அவ்வப்போது அதிசயப் பீலா கிளப்புவார்கள். அதை உண்மையா என்று பரிசோதிக்காமல் உண்மையான செய்தி போலவே மூன்றுதலை பாம்பு என்று தினத்தந்தி இதழும் (17.03.2012) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சேவ்ஸ் ஸ்னேக்ஸ் அமைப்பு நிர்வாகி சாதிக் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மட்டுமில்லை, உலகின் எந்த பகுதியிலும் மூன்று தலை ராஜநாகமோ அல்லது கூடுதல் தலைகளுடன் பாம்புகளோ கிடையாது. சிலர் கம்ப்யூட்டரில் மார்பிங் செய்து இது போன்ற பொய்யான படங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான படம் மார்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் அந்த பாம்பு படம் எடுத்து நிற்கும் இடம் கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதி. ஊட்டியில் இது போன்று பாம்பு இல்லை. குறிப்பாக எல்லநள்ளி பகுதியில் ராஜநாகம் இல்லை. எனவே, இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார்.