முன்ஜென்ம வியாபாரியிடம் ஏமாந்த இலங்கைப் பெண்
அறிவியலைத் துணைக்கழைத்து மூடநம்பிக்கையைப் பரப்பும் பக்தி வணிகர்களை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றுப் பேர்வழிகள் ஏராளம் உருவாக தொலைக்காட்சி என்ற அறிவியல் சாதனம் பயன்படுத்தப்படுகிறது.
காட்சி ஊடகத்தின் வலிமையைக் கொண்டு அம்மனுஷ்யம் என்றும், முன்ஜென்மம் என்றும் படமாக்கி நிகழ்ச்சிகளை வழங்குவதை விஜய் தொலைக்காட்சி தொடர்ந்து செய்துவருகிறது. இந்நிகழ்ச்சிகளில் பகுத்தறிவாளர்களின் பதில்களையோ, துறை சார்ந்த அறிவியலாளர் களையோ அழைத்துப் பேசுவதில்லை என்பதிலிருந்தே இது அப்பட்டமான வணிக நிகழ்ச்சி என்பது வெளிப்படை. இப்போது ஒரு நிகழ்ச்சி இத்தொலைக்காட்சியில் வந்து கொண்டிருக்கிறது. முன்ஜென்மம் என்ற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் அனைவரும் சின்னத்திரை அல்லது சினிமா நடிகர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் பெறுவதைப் பெற்றுக்கொண்டு நன்றாகவே நடித்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.
ஆனால், அதைப் பார்க்கும் பாமர மக்கள் உண்மை என்று நம்பி இந்தப் பித்தலாட்டக்காரர்களிடம் தம் பணத்தையும் அறிவையும் இழக்கின்றனர். இந்த முன்ஜென்மம் நிகழ்ச்சி நடத்துவோரை கடந்த பிப்ரவரி 1_15 உண்மை இதழில் அம்பலப்படுத்தியிருந்தோம். நாம் சொன்னது போலவே அந்த ஒரு ஏமாற்றுப் பேர்வழிகளை நேரில் சென்று தோலுரித்துள்ளது நக்கீரன் இதழ் (2012 மார்ச் 10_-13). ஒரு பெண்மணி முன்ஜென்மம் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு இலங்கையில் இருந்து சென்னை வந்து முன்ஜென்ம நிகழ்ச்சியாளர் டாக்டர் வேதமாலிகாவைச் சந்தித்துள்ளார்.அப்போது என்ன நடந்து என்பதை அந்தப் பெண்மணியே விவரிக்கிறார். என் பேரு மிதிலா சர்பத்மநாதன். கொழும்புதான் எனக்கு சொந்த ஊர். நிறைய துணை நடிகர்-_நடிகைகளின் முன்ஜென்மத்தை வெளிக் கொண்டு வர்றாங்க டாக்டர் வேதமாலிகா. அதனால டாக்டர் வேதமாலிகாவை அலுவலக செல்நம்பருக்கு தொடர்புகொண்டு அப்பாயின்மெண்ட் கேட்டேன். பிளாக் நம்பர்_19 டோர் நம்பர்_3, ஆஞ்சநேயர் கோவில் தெரு, -ஸ்ரீசக்ரா நகர், மாங்காடு, சென்னை என்கிற முகவரிக்குப் போனேன். அந்த வீட்டைப் பார்த்தாலே ஏதோ பழைய சூனியக்காரியின் வீட்டைப்போல் காட்சியளித்தது. பார்ப்பதற்கே பயமா இருந்துச்சு. கடைசியாக அந்த அறைக்கு என்னை அழைத்தார் டாக்டர் வேதமாலிகா.
அந்த அறையைப் பார்த்தாலே பீதி கிளம்புகிறது. ஏதேதோ உருவங்கள் பொறித்த ஃபோட்டோக்கள் மாட்டப்பட்டிருந்தன. ஒரு படுக்கையில் படுக்கச்சொல்லி என்னை கண்களை மூடிக்கொள்ள சொன்னார். படபடப்பு டென்ஷனுடன் கண்களை மூடிக்கொண்டேன். உங்க உடமபு நீல நிறத்துல மாறுகிற மாதிரி கற்பனை பண்ணிக்கன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல அவங்களோட குரல் எனக்கு கேக்கல. மெல்ல கண்விழித்துப் பார்த்தேன். அவங்களை காணோம். பக்கத்துல ஒரு ஆண் திருதிருன்னு முழிச்சுக்கிட்டு நிக்கறாரு. பகீர்னு ஆகிடுச்சு. அதற்குப் பிறகு டாக்டர் வேதமாலிகா வந்து நீங்க மேல பறக்குற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க. நீங்க உங்க சின்ன வயசில என்னென்ன சம்பவங்கள் நடந்துச்சோ அதையெல்லாம் கற்பனை பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க. அதே மாதிரி கண்ணை மூடி நினைச்சுக்கிட்டிருந்தேன்.
எனக்கு எதுவுமே தோணலை. இதுக்கு 4000 ரூபாய்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, 100 டாலர்ஸ் வாங்கிட்டாங்க. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 4800 ரூபாய். ஒண்ணுமே நடக்கலையேங்க இதுக்கு எதுக்கு 4800 ரூபாய் வாங்குறீங்க?ன்னு கேட்டதுக்கு, நாளைக்கு வாங்க, கண்டிப்பா உங்களோட முன் ஜென்மத்தை கண்டுபிடிச்சுடலாம்.
முதல் தடவையே எப்படிம்மா முன் ஜென்மத்தை தெரிஞ்சுக்க முடியும்னு கோபமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு ஸ்டெப் கூட போகலையேங்க ஏன் இப்படி என்னை ஏமாத்துறீங்க?ன்னு கேட்டு ஆர்கியூமெண்ட் பண்ணினாலும் மணி இரவு 8:30 ஆகிடுச்சு. இதுக்குமேல இவங்ககிட்ட சண்டை போட்டா நமக்கு ஆபத்துன்னுதான் பயந்துக்கிட்டு கிளம்பி வந்துட்டேன். எனக்கு பணம் போனதெல்லாம் பெருசில்லங்க. ஆனா, முன் ஜென்மத்தை சொல்றேன்னு இந்த அளவுக்கு சீட்டிங் பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலைங்க என்கிறார் மன வேதனையோடு.
குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் வேதமாலிகாவிடம் இதுபற்றி விளக்கம் கேட்க மாங்காடு பகுதிக்கு சென்றோம். சந்திரமுகி படத்தில் வரும் பங்களாபோல் காட்சியளிக்கிறது. காந்தி காலத்து பழைய கார் ஒன்று நிற்கிறது. நிறைய சிலைகள் உள்ளன. மாடு கத்துவது கூட நாய் ஓலமிடுவது போன்ற சத்தம்போல் நம்மை மிரட்டுகிறது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது யாரு மைண்டு டாக்டரை பார்க்க வந்திருக்கீங்களா? அவங்க வெளியில போயிருக்காங்க சார். அக்கம்பக்கத்துல உள்ளவங்க யாரும் அவங்கக்கிட்ட போகமாட்டாங்க. ஆனா, வெளியூர்லேர்ந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிறைய பெண்கள் வர்றாங்க. இந்த ஜென்மத்துல என்ன பண்ணறோம்னே தெரியலை, இதுல வேற முன்ஜென்மத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டு என்ன சார் பண்ணப் போறோம்? என்று சிரிக்கிறார்கள்.
வேதமாலிகாவைத் தொடர்புகொண்டு பேசினோம்….
நடிகர்_நடிகைகள் என்றால் ஏழெட்டு ஜென்மங்களுக்கு மேல் கூட போகமுடிகிறது. ஆனால் சாதாரண மக்கள் சில மன பிரச்சினைகளோடு என்னிடம் வருவதால் (நடிகர், நடிகைகளுக்கு மட்டும் மனப்பிரச்சினைகளே இல்லையா?) அவர்களின் முன்ஜென்மத்தை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. அதனால்தான் மிதிலா சர்பத்மநாதன் எதிர்பார்த்த அளவுக்கு முன்ஜென்மத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒத்துக்கொண்டவர், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் என்றாலும், நான் படித்த மெடிக்கல் சைக்காலஜிஸ்ட் என்றாலும் ஒன்றுதான். நான் கவுன்சிலில் (RCI) பதிவு செய்யவில்லை என்றார். அப்போது உங்கள் பெயருக்குப் பக்கத்தில் எம்.டி. என்று போட்டிருக்கிறீர்களே? என்று கேட்டதற்கு, எம்.எட். படிப்பைத்தான் அப்படிப் போட்டிருக்கிறேன் என்று சமாளித்தார். இதுகுறித்து அகில இந்திய மனநல மருத்துவ நிபுணர்களின் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினரும் தமிழக கிளை இணைச் செயலாளருமான உதவிப் பேராசிரியர் சுரேஷ்குமாரிடம் பேசியபோது, ஹிப்னோ தெரபி மூலம் முன்ஜென்மத்துக்குப் போவது என்பது மருத்துவரீதியாக இதுவரை நிருபிக்கப்படவில்லை. மருத்துவர்கள் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்வதுபோல ரிகாபிலிடேஷன் கவுன்சில் ஆஃப் இண்டியாவில் (Rehabilitation Council of India) பதிவு செய்தால்தான் இந்தியாவில் மனநல ஆலோசகராக பணியுரிய முடியும். அதற்கு கிளினிக்கல் சைக்காலஜியில் எம்.ஃபில் அல்லது பி.ஹெச்.டி. படித்திருக்க வேண்டும. ஆனால், இவர் அப்படி எதுவும் படிக்கவுமில்லை; பதிவு செய்யவுமில்லை. மேலும், வேதமாலிகா படித்ததாக குறிப்பிட்டுள்ள எந்த ஒரு படிப்புமே ஆர்.சி.அய்.யால் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அப்படியே வெளிநாட்டில் படித்திருந்தாலும் ஆர்.சி.அய். நடத்தும் தகுதித் தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
அதையெல்லாம் செய்யாததால் இவர் ஒரு போலி மனநல ஆலோகராகத்தான் இருக்கமுடியும். முன்ஜென்மம் என்கிற பெயரில் மனநல மருத்துவத் துறையையே கேவலப்படுத்தும் இவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப் போகிறோம் என்றார் கோபமாக. இப்போது மெல்ல மெல்ல சிற்றூர்களில் பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கும் சாமியார்கள், ஜோதிடக்காரர்கள் போன்றோரை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இந்தப் போலி டாக்டர். அதற்கு விஜய் தொலைக்காட்சியும் பணம் பெற்றுக்கொண்டு துணைபோய்க் கொண்டிருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் வேதமாலிகாவிடம் இதுபற்றி விளக்கம் கேட்க மாங்காடு பகுதிக்கு சென்றோம். சந்திரமுகி படத்தில் வரும் பங்களாபோல் காட்சியளிக்கிறது. காந்தி காலத்து பழைய கார் ஒன்று நிற்கிறது. நிறைய சிலைகள் உள்ளன. மாடு கத்துவது கூட நாய் ஓலமிடுவது போன்ற சத்தம்போல் நம்மை மிரட்டுகிறது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது யாரு மைண்டு டாக்டரை பார்க்க வந்திருக்கீங்களா? அவங்க வெளியில போயிருக்காங்க சார். அக்கம்பக்கத்துல உள்ளவங்க யாரும் அவங்கக்கிட்ட போகமாட்டாங்க. ஆனா, வெளியூர்லேர்ந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிறைய பெண்கள் வர்றாங்க. இந்த ஜென்மத்துல என்ன பண்ணறோம்னே தெரியலை, இதுல வேற முன்ஜென்மத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டு என்ன சார் பண்ணப் போறோம்? என்று சிரிக்கிறார்கள்.
வேதமாலிகாவைத் தொடர்புகொண்டு பேசினோம்….
நடிகர்_நடிகைகள் என்றால் ஏழெட்டு ஜென்மங்களுக்கு மேல் கூட போகமுடிகிறது. ஆனால் சாதாரண மக்கள் சில மன பிரச்சினைகளோடு என்னிடம் வருவதால் (நடிகர், நடிகைகளுக்கு மட்டும் மனப்பிரச்சினைகளே இல்லையா?) அவர்களின் முன்ஜென்மத்தை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. அதனால்தான் மிதிலா சர்பத்மநாதன் எதிர்பார்த்த அளவுக்கு முன்ஜென்மத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒத்துக்கொண்டவர், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் என்றாலும், நான் படித்த மெடிக்கல் சைக்காலஜிஸ்ட் என்றாலும் ஒன்றுதான். நான் கவுன்சிலில் (ஸிசிமி) பதிவு செய்யவில்லை என்றார். அப்போது உங்கள் பெயருக்குப் பக்கத்தில் எம்.டி. என்று போட்டிருக்கிறீர்களே? என்று கேட்டதற்கு, எம்.எட். படிப்பைத்தான் அப்படிப் போட்டிருக்கிறேன் என்று சமாளித்தார். இதுகுறித்து அகில இந்திய மனநல மருத்துவ நிபுணர்களின் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினரும் தமிழக கிளை இணைச் செயலாளருமான உதவிப் பேராசிரியர் சுரேஷ்குமாரிடம் பேசியபோது, ஹிப்னோ தெரபி மூலம் முன்ஜென்மத்துக்குப் போவது என்பது மருத்துவரீதியாக இதுவரை நிருபிக்கப்படவில்லை. மருத்துவர்கள் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்வதுபோல ரிகாபிலிடேஷன் கவுன்சில் ஆஃப் இண்டியாவில் (ஸிமீலீணீதீவீறீவீணீவீஷீஸீ சிஷீஸீநீவீறீ ஷீயீ மிஸீபீவீணீ) பதிவு செய்தால்தான் இந்தியாவில் மனநல ஆலோசகராக பணியுரிய முடியும். அதற்கு கிளினிக்கல் சைக்காலஜியில் எம்.ஃபில் அல்லது பி.ஹெச்.டி. படித்திருக்க வேண்டும. ஆனால், இவர் அப்படி எதுவும் படிக்கவுமில்லை; பதிவு செய்யவுமில்லை. மேலும், வேதமாலிகா படித்ததாக குறிப்பிட்டுள்ள எந்த ஒரு படிப்புமே ஆர்.சி.அய்.யால் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அப்படியே வெளிநாட்டில் படித்திருந்தாலும் ஆர்.சி.அய். நடத்தும் தகுதித் தேர்வை எழுதியிருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாததால் இவர் ஒரு போலி மனநல ஆலோகராகத்தான் இருக்கமுடியும். முன்ஜென்மம் என்கிற பெயரில் மனநல மருத்துவத் துறையையே கேவலப்படுத்தும் இவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப் போகிறோம் என்றார் கோபமாக. இப்போது மெல்ல மெல்ல சிற்றூர்களில் பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கும் சாமியார்கள், ஜோதிடக்காரர்கள் போன்றோரை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இந்தப் போலி டாக்டர். அதற்கு விஜய் தொலைக்காட்சியும் பணம் பெற்றுக்கொண்டு துணைபோய்க் கொண்டிருக்கிறது.