தமிழகத்தின் வரலாற்றை நன்கு
அறிந்தவர்கள் _ ராஜாஜி 1953 இல் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த போது வர்ணாசிரமக் கொள்கை அடிப்படையில், குலக்கல்வித் திட்டத்தை அறிவித்ததும், அதனால் மிகக் கடுமையாக பெரியார் பல போராட்டங்களை நடத்தியதையும், அதன் விளைவாக 1954இல் ராஜாஜி பதவி விலகியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதையும் மறந்திருக்க மாட்டார்கள்!
இதற்காகப் பழிவாங்கும் நோக்கோடு, பெரியாரையும் அவரது திராவிடக் கொள்கைகளையும் சிதைக்கும் குறிக்கோளில் ராஜாஜி தனது சீடர் ம.பொ.சியை தமிழ்த் தேசிய அமைப்பைத் தோற்றுவிக்கச் செய்து, தமிழர்கள் வேறு; -திராவிடர்கள் வேறு என நஞ்சையும், பிரிவினையையும் விதைக்கச் செய்தார்!
ஆரியத்தின் அடிமை ம.பொ.சி அந்த வேலையை இறுதிவரை செய்தார். அவரின் தொடர்ச்சியாக வந்தவர்கள்தாம் இன்றைய மணியரசன்களும் சீமான்களும்!
அந்த வரிசையில் வந்தவரான பெங்களூரு குணா என்ற குணசீலன் இராமசாமி எழுதிய புளுகு மூட்டைகளின் குவியல்தான், ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற நூல்! அந்த நூலுக்கு மறுப்புரையாக எழுதப்பட்டது தான் மஞ்சை வசந்தனின் இந்த நூல்!
திராவிடச் சிந்தனையாளர், ‘உண்மை’ இதழின் பொறுப்பாசிரியர், எழுத்தாளர் மஞ்சை வசந்தன், பல ஆண்டுகளுக்கு முன்பே கவிஞர் கண்ணதாசன் எழுதிய, ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற நூலுக்கு மறுப்புரையாகவும் ஆய்வுரையாகவும் எழுதிய நூல் – அர்த்தமற்ற இந்துமதம்! அந்த நூலின் வெற்றிக்குப் பிறகு, குணா எழுதிய நூலுக்குப் பதிலடியாக இந்த நூலை சிறப்பாகப் படைத்துள்ளார்!
அணிந்துரையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்த நூலைப் பற்றியும் நூலுக்குக் காரணமான குணா பற்றியும் தனது கருத்துகளை வைத்துள்ளார்! மஞ்சை வசந்தன் தனது வாதத்தை இவ்வாறு வைத்துள்ளதை வெகுவாகப் பாராட்டியுள்ளார்!
‘‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’’ என்ற தலைப்பே தவறானது. நிற்பவர் தான் விழ முடியும்! ஆரியத்திற்கு அடிமையாகி, மானமிழந்து, உரிமையிழந்து, வீழ்ந்து கிடந்த நிலையிலே தான் – திராவிடம் கையில் எடுக்கப்பட்டது!
அப்படியிருக்க, வீழ்ந்து கிடந்தவர் எப்படி திராவிடத்தால் விழ முடியும்? ஆதலால் நூலின் அடித்தளமே தவறு! என்று பளிச்சென்று சொல்லி விடுகிறார் நூலாசிரியர் மஞ்சை வசந்தன்” என சிறப்பான அணிந்துரையை தந்துள்ளார்!
“திராவிடத்தால் வீழ்ந்தோமா?’’ என்ற கேள்வியைக் கேட்டு, பெங்களூரு குணாவிற்கு மஞ்சை வசந்தன் விளாசுகின்ற விளக்கமும் பதிலும் விளாரெடுத்து நாலு இழுப்பு இழுத்ததற்குச் சமம் என்றே சொல்ல வேண்டும்!
பதிலடி இதோ:
“ஓர் ஆய்வாளர் என்பவர் முன் முடிவுகள் ஏதும் இன்றி, விருப்பு வெறுப்பின்றி, ஆய்ந்து, உண்மை நிலையை உறுதி செய்து, உலகுக்கு உணர்த்த வேண்டும்.
ஆனால், இந்தக் குணா என்ற ஆரியக் கைக்கூலி, முடிவை முதலில் வைத்துக்கொண்டு அதற்கேற்ப அதை எப்படிப் புனையலாம், எப்படித் திரிக்கலாம், எப்படி மறைக்கலாம், எப்படித் தொடர்பு படுத்தலாம் என்ற குறிக்கோளோடு எழுதப்பட்ட புனைவுகளும் புளுகுகளும் அடங்கிய நூல்!
உறங்கிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தை விழித்தெழச் செய்த, ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்தும் ஆற்றல் கொண்ட ஓர் இயக்கத்தை, வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் காட்டி, இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களை ஆரியத்திற்கு அரண் சேர்க்க, ஆள் சேர்க்கும் இனத் துரோகத்தைத் தனது நூல் மூலம் செய்கிறார் குணா!” என தோலுரித்துத் தொங்க விட்டுள்ளார் மஞ்சை வசந்தன்!
மஞ்சை வசந்தனின் இந்த நூல் – ஆரியத்தால் எவ்வாறு வீழ்ந்தோம் என்ற விவரங்களையும், திராவிடத்தால் எவ்வாறு எழுந்தோம் என்ற தகவல்களையும் தருவதோடு, பெரியார் பற்றியும்; திராவிடம், தமிழ் பற்றியும்; ஆரியம், பார்ப்பனியம், பிராமணியம் பற்றிய விளக்கங்களையும்; தனித் தமிழ்நாடு; தமிழ் தேசியம், வடவர் எதிர்ப்பு, ஆங்கில மொழி இப்படி பல்வேறு தலைப்புகளில் ஆய்வு பூர்வ அடிப்படையில் கருத்துக்களைத் தருகின்றது!
ஆரியத்தால் வீழ்ந்தோம்! என்று வருந்திச் சொல்கிறோமே அதற்கான காரணங்களை நூலாசிரியர் பட்டியலிட்டுத் தந்துள்ளார்!
இதோ சில சான்றுகள்:
1) ஆரியப் பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதியினரை தவிர மற்றவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது!
2) ஒவ்வொருவரும் அவரவர் தகப்பன் தொழிலைச் செய்ய வேண்டும். அவர்களுக்குக் கல்வி கற்கவும் அனுமதி இல்லை!
3) கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழையக் கூடாது! கருவறைக்குள் மற்ற ஜாதியினர் நுழையக் கூடாது!
4) கோயில்களில் தமிழில் பாடக் கூடாது! பாடினால் கடவுள் தீட்டாகி விடும்!
5) திருமணங்களில் ஆரியப் பார்ப்பனர் மந்திரம் சொல்லி திருமணம் நடத்தினால் மட்டுமே செல்லுபடியாகும்!
6) தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் செல்லக்-கூடாது! கல்விக் கூடங்களில் பார்ப்பனர்களுக்கு தனித் தண்ணீர்ப் பானை; மற்றவர்களுக்கு தனிப் பானை!
7) உணவு விடுதிகளில் பார்ப்பனர்களுக்கு தனிப் பந்தி! மற்றவர்களுக்கு தனியே பந்தி!
8) இந்திய ஆட்சிப் பணியில் 90% உயர் அதிகாரிகள், நீதிபதிகள் 75% பார்ப்பனர் மயமாக இருந்தது!
9) தமிழில் எழுதிய உன்னத நூல்களை எரித்தும், நீரில் விட்டும், மண்ணில் புதைத்தும் அழித்தார்கள் பார்ப்பனர்கள்!
10) தமிழர்களிடையே வர்ணாசிரம அடிப்
படையில் ஜாதியை உண்டாக்கி, ஒற்றுமையைக் கெடுத்து, இனத்தை வீழ்த்தி-னார்கள்!
திராவிடத்தால் எழுந்தோம்! என்று பெருமை
யாகச் சொல்கிறோமே, அதற்கான காரணங்களை நூலாசிரியர் பட்டியலிட்டுத் தந்துள்ளார்!
இதோ சில சான்றுகள்:
1) மான மீட்சி -: தமிழன் மானமும் அறிவும் உள்ள
வனாக மீண்டும் வாழவேண்டும் என்று தமிழ
னைத் தட்டி எழுப்பியது பெரியாரின் இயக்கம்!
2) உரிமை பெறல் : – கல்வி, வேலை வாய்ப்பு இரண்டையும் ஆதிக்கக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆரியக் கோட்டையைத் தகர்த்து இட ஒதுக்கீடால் பெற்றது!
3) கல்வி : – சூத்திரன் கற்கக் கூடாது என்ற சாத்திரத்தை மாற்றி அமைத்தது திராவிடர் இயக்கம்!
4) கலை : – பார்ப்பன மேல் தட்டு மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்த நடனம், இசை, நடிப்பு போன்ற துறைகளிலும் அனைத்து ஜாதியினரும் வெற்றிக் கொடி நாட்டியது – (கே.பி.சுந்தராம்பாள், சிவாஜி கணேசன், இளையராஜா, இப்படி பலர்)
5) மேடைத் தமிழ் : – நற்றமிழ்ச் சொற்களை நாள் தோறும் நாடெங்கும் பரப்பி – அக்ராசனர் தலைவராகி, நமஸ்காரம் வணக்கமாகி, வழக்கில் வந்து பேசப்பட்டது!
6) மானமுள்ள மணமுறை : – ஆரியர் மந்திரம் சொல்லி, அக்னி வளர்த்து நடைபெற்ற திருமணங்களை, தமிழ் மரபுக்கு உகந்ததாக மாற்றியமைக்கப்பட்ட திருமண முறை – சீர்திருத்தத் திருமணம் நடைமுறையானது!
7) தமிழர் விழாக்கள் : – தமிழர்களை இழிவு செய்யும் ஆரிய விழாக்களைக் புறக்கணிக்கச் செய்து, தமிழர் விழாவான பொங்கலை எல்லோரும் கொண்டாடச் செய்தது!
8) தமிழ் வளர்த்தல் : – தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு’
பெயர் சூட்டல்! உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தியது, மக்களுக்கு தமிழிலே பெயர் சூட்ட தூண்டுகோலாக இருந்தது!
9) இந்தி ஆதிக்க எதிர்ப்பு : – இந்தியைத் திணித்து, தமிழைப் புறக்கணிக்க முயன்ற போதெல்லாம், மாநிலம் தழுவிய போராட்
டங்கள் நடத்தியது!
10) ஜாதி ஒழிப்பு : – தமிழர்களிடையே ஜாதியை ஒழிக்க, சமபந்தி உணவு பறிமாறல், கலப்புத் திருமணங்கள், பெயரிலிருந்த ஜாதியை நீக்கல் போன்றவை!
இவ்வாறு மிகச் சிறப்பாக தனது கருத்துகளை ஆதாரங்களோடு எழுதியுள்ளார்! மஞ்சை வசந்தன் தமிழ் இனத்திற்குத் தந்த சீரிய கொடையாக இந்த நூலைக் கொள்ள! நூலாசிரியருக்கு நன்றியும் பாராட்டுகளும்!
இறுதியாக இந்த நூல் பற்றி ‘நச்’சென்று நாலு வரிகள் நான் சொல்வது:
ஆரியத்தால் வீழ்ந்தோம்!
வீழ்ந்ததால் தாழ்ந்தோம்!!
திராவிடத்தால் எழுந்தோம்!
எழுந்ததால் வாழ்ந்தோம்!!
– பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்