பெரியாரை அறிவோமா?

ஏப்ரல் 01-15

1)    திரு. வி.க. அவர்கள் பெரியாரைப் பற்றி எழுதிய பத்திரிகை

அ) குடி அரசு  ஆ) திராவிடன்  இ) நவசக்தி  ஈ) நவமணி

2)    பெரியாருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் பெரியார் அவர்கள் என்ன செய்தார்?

அ) திருச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து வந்தார் ஆ) மாலையை நாராகவும் நூலாகவும் பிரித்து விற்கச் செய்தார்  இ) கூட்டத்திலேயே ஏலம் போட்டு விட்டார் ஈ) மேடையிலேயே விட்டுவிட்டு வந்து விட்டார்

3)    தந்தை பெரியாரைக் காங்கிரசில் ஈடுபடத் தூண்டியவர்கள் யார்?

அ) இராஜகோபாலாச்சாரியார் ஆ) காந்தி, -நேரு இ) பாரதியார், -சத்தியமூர்த்தி ஈ) தியாகராயர் செட்டியார்,-    டி.எம்.நாயர்

4)    தந்தை பெரியார் தொடங்கிய முதல் குடிஅரசு இதழ் வெளிவந்த நாள் எது?

அ) 2.5.1923    ஆ) 2.5.1925    இ) 2.5.1928    ஈ) 2.5.1930

5) நான்  ஏடு நடத்துவது என்னுடைய புகழையோ செல்வாக்கையோ வளர்த்துக்கொள்ளவும் அதை வைத்துப் பிழைப்பு நடத்தவும் அல்ல.  இக்கருத்துக்களைச் சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன்.  சொல்ல வேண்டிய கருத்துக்களை நானே எழுதி நானே அச்சுக் கோர்த்து நானே அச்சிட்டு, நானே படித்துக்கொள்ளும் நிலைக்குப் போனாலும் இழப்பைப் பொருட்படுத்தாது வெளியிடுவேன்   என்று தந்தை பெரியார் கொள்கை உரத்துடன் சூளுரைத்தது எந்த ஏடு பற்றி?

அ) விடுதலை  ஆ) புரட்சி  இ) குடிஅரசு  ஈ) ரிவோல்ட்

6)    தேவதாசி ஒழிப்புச்  சட்ட முன்வரைவை தாக்கல் செய்த சட்டமன்ற உறுப்பினர் யார்?

அ) டாக்டர் நாயர்  ஆ) டாக்டர் முத்துலெட்சுமி இ) ஏ. பி. பாத்ரோ  ஈ) பனகல் அரசர்

7) …. என்கிற கொள்கையானது, உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்பட்டு விடுமானால், ஜன சமூகமானது கவலையற்று, சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலைமையற்று நிம்மதியாக, சாந்தியாக, திருப்தியுடன் குதூகலமாக வாழ வழியேற்பட்டு விடும்,  பெரியார்.   கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கான சொல் யாது?

அ) சமதர்மம்  ஆ) கூட்டுறவு இ) பொதுவுடைமை ஈ)  சுயமரியாதை

8)    “பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும் என்ற பெரியாரின் கருத்து இடம் பெற்ற நூல்

அ) நியாயம் எங்கே?    ஆ) நீதி எது? இ) நீதியின் நிழல்  ஈ) நீதி கெட்டது யாரால்?

9)    பெரியாரின் தொடக்க கால நடவடிக்கைகளில் தீவிரமாய்ப் பங்காற்றிய அவரின் குடும்பத்துப் பெண் உறுப்பினர்

அ) மரகதம்  ஆ) பொன்னுத்தாய்  இ) எஸ்.ஆர்.கண்ணம்மாள்  ஈ)ஈ.வெ.கிருஷ்ணசாமி

10)    “நமக்காகவே வாழ்கின்றவர்” – படத்துறை வேலுமணி இல்ல மணவிழாவில் பெரியாரை இவ்வாறு பாராட்டியவர்:

அ) எம்.ஜி.ஆர்.  ஆ) ஏ.வி.எம்.  இ) மதுரை சோமு ஈ) நேஷனல் பெருமாள்

 

பெரியாரை அறிவோமா – விடைகள்

1.இ,

2.இ,

3.அ,

4.ஆ,

5.இ,

6.ஆ,

7.ஆ,

8.ஈ,

9.இ,

10.அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *