நிகழ்ந்தவை

ஏப்ரல் 01-15

  • கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சரவை மார்ச் 19 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. அன்றே கூடங்குளம் எதிர்ப்புக் குழுவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • இலங்கைக்கு எதிராக அய்.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் மார்ச் 19 அன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

  • மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மார்ச் 18 அன்று பதவி விலகினார். இவர் சார்ந்த திரினமூல் காங்கிரசின் முகுல்ராய் மார்ச் 20 அன்று புதிய ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

  • ஒடிசா மாநிலம் காந்தமால்-_கஞ்சம் மாவட்டத்தில் இத்தாலி சுற்றுலாப் பயணிகள் இருவரை மாவோயிஸ்டுகள் மார்ச் 18 அன்று கடத்திச் சென்றனர். தங்களது 13 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு கடிதம் அனுப்பினர்.
  • கூடங்குளம் அணுமின் நிலையம் மார்ச் 20 அன்று செயல்படத் தொடங்கியது. அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
  • சங்கரன்கோவில் மார்ச் 18இல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மார்ச் 22இல் வாக்குகள் எண்ணப்பட்டு அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • கர்நாடகாவில் தேவதாசி முறைக்கு எதிராகப் போராடிவரும் சோபா கெஸ்டி என்ற பெண்ணுக்கு சென்னையில் மார்ச் 21இல் அமெரிக்கத் தூதரகம் விருது வழங்கியது.
  • கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் 5 பேர் மார்ச் 21இல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 5 ஊர்களுக்கு பால், தண்ணீர், காய்கறிகள், மின்சாரத்தை அரசு தடைசெய்து நெருக்கடி கொடுத்தது.
  • ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தவறில்லை; குற்றமாகாது என உச்சநீதிமன்றத்தில் மார்ச் 21இல் மத்திய அரசு தெரிவித்தது.
  • ரயில்வே நிதிநிலை அறிக்கையில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் நீக்கம் செய்யப்படுகிறது என்று புதிய மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் மார்ச் 22 அன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *