வாக்குறுதிகளை நிறைவேற்றிய வாய்மையுள்ள தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை – 2011

ஏப்ரல் 01-15

  • பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம்.
  • தாய்மார்களின் சிரமங்களைக் குறைக்க கிரைண்டர் அல்லது மிக்சி இலவசமாக வழங்குவோம்.
  • நகரங்களில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு குறைந்த வாடகையில் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்துவோம்
  • முதியோர் உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்துவோம்.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவியை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவோம்.
  • திருமண நிதி உதவியை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவோம்.
  • கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி மானியம் 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவி ரூ.2 லட்சம் மானியத்துடன் 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்!
  • கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை.
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்குவோம்.
  • மகப்பேறு விடுப்பு 3 மாதங்கள் என்பது 4 மாதங்கள் என உயர்த்துவோம்.
  • உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயற்படுத்துவோம்.
  • ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்.
  • மூத்த குடிமக்களுக்கு அரசு உள்ளூர் பேருந்துகளில் இலவச பஸ் பாஸ்.
  • வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரை – வறுமைக் கோட்டிற்கு மேல் வருவாய் உள்ளவர்களாக உயர்த்துவோம்.
  • பொதுமக்களுக்கான சேவைகளை வழங்க வட்ட அளவிலும், கோட்ட அளவிலும் சேவை மய்யங்களை ஏற்படுத்துவோம்.
  • நீதி மன்ற மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் கோருவோம். 8 கந்து வட்டி கொடுமை நீங்க வழி காண்போம்.
  • நெசவாளர்கள் கச்சாப் பொருள்களும், முதலீட்டுப் பொருள்களும் பெற கூட்டுறவுக் கடன்களை வழங்குவோம்.
  • தலித் கிறித்தவர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
  • தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் நல ஆணையம் அமைப்போம்.
  • சாக்கடைகளைச் சுத்தம் செய்வோருக்கு வேறு மாற்றுப் பணி வழங்கிடுவோம்.
  • திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்ற தனியாக சுய உதவிக் குழுக்களை அமைப்போம்.
  • சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கக் கூடாதென மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • அரசு அலுவலர்களின் குறைகளைக் களைய நிரந்தரஆணையம் அமைப்போம்.
  • பள்ளி மாணவர்களுக்கு இரண்டு சீருடைகள் என்பதற்குப் பதிலாக மூன்று சீருடைகள்.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவோம்.
  • மதுரை,கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவோம். இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டளவை உயர்த்துவதுபற்றிப் பரிசீலிப்போம்.
  • 2006-_2009 வரை பெறப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டியை அரசே செலுத்த பரிசீலிக்கப்படும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள், அரசு பொறியியல் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்.
  • இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, தோட்டக்கலைப் பயிர்களுக்கும், மர வகைப் பயிர்களுக்கும் விரிவுபடுத்துவோம்.
  • படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குத் தேவையான தகுதியை உருவாக்க மாவட்டம் தோறும் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மய்யங்கள் அமைக்கப்படும்.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக்கூடிய சூரியஒளி மின்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மின்உற்பத்தியைப் பெருக்குவோம்.
  • விவசாயிகள், நெசவாளர்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.
  • 2004 முதல் 2009 வரை வழங்கப்பட்ட கல்விக் கடன்களுக்கான வட்டியை அரசே ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கூட்டுறவு நெசவாளர்களுக்கு வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம் 400 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • கூட்டுறவுச் சங்கங்களில் தொடர்ந்து அய்ந்தாண்டுகள் பணிபுரிந்து 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து நெசவாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்.
  • வசூலிக்க இயலாத பண்ணை சாராத கடன், கடனுக்கான வட்டி, படிப்படியாகத் தள்ளுபடி செய்யப்படும்.
  • அரசு அலுவலர்களின் குறைகளைக் களைய நிரந்தர ஆணையம் அமைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *