காதலர் தினத்தில், ஜாதகம் பார்க்காமல், வேத மந்திரங்கள் முழங்காமல், பூங்காவில் வைத்தே காதலர்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து, மொய்யும் எழுதிச் செல்லும் இந்து முன்னணியினர், ஆயிரம் பெரியார்களுக்குச் சமம்! வாழ்க அவர்களது சீர்திருத்தச் சிந்தனை!
கவுதமன் Ds கரிசால்குலத்தான் பிப்ரவரி 15, 2012 மாலை 6:15 மணி
இருபது ஆண்டுகளுக்கு முன் இயேசு கொல்லப்பட்டிருந்தால், கத்தோலிக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தங்களின் கழுத்தில் சிலுவைக்குப் பதிலாக குட்டி மின் இருக்கையை அணிந்திருப்பார்கள்.
–லென்னி ப்ரூஸ் பிப்ரவரி 11, 2012 மாலை 6:21 மணி
காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்துவதாக நினைத்து, நாய்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள் இந்து முன்னணியினர். வழக்கமாக நாமெல்லாம் மனிதர்களின் திருமணங்களுக்குச் சென்று அதனை முன்னின்று நடத்துவதற்குக் காரணம் நாமும் மனிதர்கள் என்பதால்தான். இந்து முன்னணியினர் நாய்களுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் என்றால்?
– கோவி.லெனின் பிப்ரவரி 15, 2012 இரவு 9:54 மணி
என்கவுண்ட்டர்களை ஆதரிக்கும் சமூகம், மரண தண்டனையையும் ஆதரிக்கும். அதிகார வர்க்கம் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட கொலைகளுக்குத் தண்டனை என்ன? கொலைக்குக் கொலைதான் தீர்வு என்றோ, கொள்ளைக்கு கொலைதான் தீர்வு என்றோ நம்புவது காட்டுமிராண்டித்தனம். மக்களை இந்த மாதிரியான மனோநிலைக்கு காக்க காக்க, வேட்டை மாதிரியான படங்கள் தயார்ப்படுத்துகின்றன. தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு, ராஜீவ்காந்தி வழக்கு, கோவையில் குழந்தைகள் கடத்தப்பட்ட வழக்கு இப்படி எந்த வழக்காயினும், தண்டனை என்கிற பெயரில் உயிர்களை எடுப்பதை ஒத்துக்கொள்ள முடியாது. மனித உரிமை மீறல்களை அரசு செய்வது நமக்குப் புதிதல்ல.. ஆனால், அதைப் பெரும்பாலானோர் சபாஷ் போட்டுப் பாராட்டுவது, போக வேண்டிய தொலைவு அதிகம் என்பதை உணர்த்துகிறது. An eye for an eye makes the whole world blind. – கவின் மலர்
நீ வணங்கும் முருகன் ‘கலப்புத் திருமணம் ‘ செய்தால், அவன் மனைவியையும் கடவுளாய் வணங்கும் நீ, உன் குடும்பத்தில் யாராவது கலப்புத் திருமணம் செய்யும் போது எதிர்ப்பது ஏன்? சந்திரன் வீரசாமி
Toilet as per Vaastu !!!
What are your views on vaastu in general
– Nivas Jayaseelan