செய்திக்கீற்று

மார்ச் 01-15

  • ஒடிசா மாநிலம் பலசூர் ஏவுதளத்திலிருந்து எதிரி ஏவுகணைகளை நடுவானில் தடுத்து நிறுத்தும் இடைமறிப்பு ஏவுகணையான பிருத்வி வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
  • இந்தியர்களின் கருப்புப் பணம் சுமார் 25 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சி.பி.அய். இயக்குநர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
  • உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்புப் புகார் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

  • மேனாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
  • பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு என்று டெல்லி உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றமும் டெல்லி உயர் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

  • தாய்லாந்தில் நடைபெற்ற பட்டையா ஓப்பன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில்  சானியா – அனஸ்டசியா வெற்றி பெற்றனர்.
  • மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் கோமயாகுவா நகரில் உள்ள சிறைச்சாலையில் தீப்பிடித்ததில் 359 கைதிகள் உயிரிழந்தனர்.

  • நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப்  ரசா கிலானி  குற்றவாளி என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  • மின்னனுக் (எலக்ட்ரானிக்) காசோலையை பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் ஜான் வைன்ஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  • சிறந்த சேவைக்கான அமெரிக்காவின் மனிதநேய விருது இந்தியப் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைக்க முடிவு செய்திருப்பதற்கு 8 மாநில முதல் அமைச்சர்கள் எதிர்ப்புப் தெரிவித்துள்ளனர்.
  • சமூக இணையதளங்களைத் தணிக்கை செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.
  • அய்.நா. பொதுச்சபையில் சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத் மீதான கண்டனத் தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 137 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

  • மத்திய அரசின் சுகாதாரத் தூதராக அனிதா நரே (வயது 23) பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *