(World Patient Safety Day)
உலக சுகாதார நிறுவனம் (WHO) பாதுகாப்பற்ற மருத்துவப் பழக்கங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் நோய் எதிர்ப்பு மருந்துகளின் (Antibiotics) முறையற்ற உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதே முதன்மையானதாகும். 2019 கொரோனா காலத்தில் மட்டும் இந்தியர்கள் ரூபாய் 500 கோடி மதிப்பிலான நோய் எதிர்ப்பு மாத்திரைகளை உண்டிருக்கின்றனர். இதில் பாதியளவு அங்கீகரிக்கப்படாதவை என லான்சட் நிறுவனம் கூறுகிறது.
இந்த மருந்துகள் தாராளமாகக் கிடைப்பதும், தானே இவற்றைத் தேர்ந்து கொள்வதும், போலி டாக்டர்களும், முறையான டாக்டர்களாலும்கூட கண்ணை மூடிக்கொண்டு பரிந்துரை செய்வதுமான நிகழ்வுகள் குற்றமானவையே. அதிகமான நோய் எதிர்ப்பு மருந்துகளை உண்பது அம்மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தியைக் கொண்ட பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து விடுவதால் பின் இவர்கள் எந்த மருந்து எடுத்துக்கொண்டாலும் அந்த மருந்துகள் அவர்கள் உடலில் வேலை செய்வதில்லை. எனவே, அரசுகள் தனிநபர் மருத்துவச் சேவைகளையும், மருத்துவமனைகளையும் தீவிரமாகக் கண்காணித்து முறையற்றவைகளைத் தடை செய்ய வேண்டும்.