நிகழ்ந்தவை

மார்ச் 01-15
  • உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 11 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 59 சதவிகித வாக்குகளும், பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் 57 சதவிகித வாக்குகளும், பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்தலில் 57 சதவிகித வாக்குகளும், பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 5ஆம் கட்டத் தேர்தலில் 59 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
  • 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்ஜுதர் விரைவு ரயிலில் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான சமல் சவுகான் பிப்ரவரி 12 அன்று தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார்.

  • கர்நாடக மாநிலத்தின் உயர்கல்வி அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா பிப்ரவரி 14 அன்று மரணமடைந்தார்.

 

  • அண்ணா நூலகத்தில் இருக்கும் வசதிகளையோ செயல்பாடுகளையோ அரசு திரும்பப் பெற்றால் அதை நீதிமன்றம் கடுமையாக கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 16 அன்று எச்சரித்தது.

  • வீட்டுக்கடன் ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் உல்ஃப் பிப்ரவரி 17 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

  • கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவினர் பிப்ரவரி 18 அன்று நேரில் ஆய்வு செய்ததையடுத்து, போராட்டக் குழுவினருடன் பிப்ரவரி 19 அன்று ஆலோசனை நடத்தினர்.

  • நில மோசடிப் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவின் கணவர் நடராசன் பிப்ரவரி 18 அன்று கைது செய்யப்பட்டார்.
    • பாபா ராம்தேவ் டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் பிப்ரவரி 18 அன்று பேசியபோது கூட்டத்திலிருந்த நபர் ராம்தேவ் முகத்தில் கருப்பு மையை வீசினார்.
  • ஏமனில் பிப்ரவரி 21 அன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் கெவின் ரூத் தனது பதவியை பிப்ரவரி 22 அன்று ராஜினாமா செய்தார்.

சென்னையில் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 5 வடமாநில இளைஞர்கள் காவல்துறையினரால் வேளச்சேரி பகுதியில் பிப்ரவரி 23 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *