குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரத்தைத் தடுக்க அரசு தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளது குஜராத் உயர் நீதிமன்றம்.
கலவரம் நடைபெற்றபோது அதனைத் தடுக்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுப்பதில் அலட்சியமாகச் செயல்பட்டதால், மாநிலம் முழுவதும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.
சேதமடைந்தவற்றைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். கலவரத்தின்போது சேதமான வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 26 முதன்மை செசன்சு நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் மாவட்டங்களிலிருந்து இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று இழப்பீட்டுத் தொகை பற்றி முடிவு செய்யவேண்டும். அவர்கள், இழப்பீட்டுத் தொகை பற்றிய விவரங்களின் அறிக்கையினை 6 மாதத்திற்குள் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.