புதுப்பாக்கள்

பிப்ரவரி 16-29

அறியாமை

  • உண்ண உணவில்லை!
    எட்டாத இடத்தில்
    காக்கைக்கு உணவு!
  • பக்தியுடன்
    ஏழை ரசிகன்
    கடவுள் வேடத்தில்
    நடிகை!
  • சாலையில்
    பகுத்தறிவுப் பகலவன் சிலை! அங்கே
    ஆட்டுமந்தைகளாய்
    பக்தர்கள் ஊர்வலம்!
  • சித்தர்களின் மூச்சுப் பயிற்சியும்,
    தியானமுமாக
    வேடதாரிகளாய்
    பித்தர்கள்!
  • தன்னம்பிக்கை
    இல்லாமல்
    தும்பிக்கை மேல்
    நம்பிக்கை வைத்தான் பக்தன்!
  • அறியாமை
    நிறைந்தே இருந்தது!
    பக்தனின் மனம்
    கோவில் உண்டியல் போல!
  • கல்லடி பட்டான் தோழன்!
    அது
    கடவுள் இல்லை!
    கல் என்று சொன்னதற்காக!
  • வீதி இருளகல மின் கம்ப
    வெளிச்சம்!
    ஜாதி இருளகல
    பெரியார் சுடர்
    வெளிச்சம்!

– போ.முத்துக்கிருட்டினன், வெள்ளக்கோவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *