ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதன்முறையாக இந்தியாவின் பயஸ், ஸ்டெபானெக் வெற்றி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சென்றமுறை வெற்றி பெற்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற தேசிய டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் அமல்ராஜ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
பெட்ரோல் – டீசலுக்கு மாற்றான எரிவாயு மன்னார் வளைகுடாவில் கிடைப்பதாகவும் இது இந்தியா முழுவதும் 200 ஆண்டுகளுக்குப் போதுமானது என்றும் கடல்சார் பல்கலைக்கழக இயக்குநர் பி.விஜயன் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் ஸ்போர்ட் செட் என்ற இடத்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்துப் போட்டியில் ஏற்பட்ட கலவரத்தில் 74 பேர் உயிரிழந்தனர்.
- அமெரிக்கர்கள் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்ய உதவியதற்காக சுவட்சர்லாந்திலுள்ள விஜிலின் அன்ட் கோ வங்கிக்கு ரூ. 78.4 கோடி அபராதம் விதித்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
- லிபியா நாட்டில் அரசியல் அமைப்பு சபையை அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய தேர்தல் சட்டத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
- சிரியா நாட்டில் அரசுக்கு எதிராகப் போராடும் மக்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்தினர் பீரங்கிகளுடன் சென்று சுட்டதில் ஒரே நாளில் 217 கொல்லப்பட்டனர்.
- கிறிஸ்தவ தேவாலயத்தின் ஆயர் பணிக்கு உலகத்திலேயே முதல் முறையாக திருநங்கை பாரதியை நியமனம் செய்ய தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயம் முடிவு செய்துள்ளது.
- அய்.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலகக் கோரும் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தங்கள் தடை ஆணையைப் (வீட்டோ) பயன்படுத்தி முறியடித்தன.
- ரயில் டிக்கெட்டுகளை 4 மாதங்களுக்கு (120 நாள்) முன்பே முன்பதிவு செய்யும் முறை மார்ச் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.