2001-2002ஆம் ஆண்டில் ரூ.20,090 கோடியாக இருந்த தங்கத்தின் இறக்குமதி மதிப்பு, 2010-2011இல் ரூ.1.66 லட்சம் கோடியானது. இதே நிலை தொடர்ந்தால் 2015_2016இல் ரூ.4.9 லட்சம் கோடியாகும் வாய்ப்பு உள்ளது.
சென்ற நிதியாண்டில் தங்கம் இறக்குமதி மதிப்பு, 12 மாநிலங்களின் மொத்த உற்பத்தி மற்றும் உரங்கள், உணவுகளுக்கான பட்ஜெட் மானியத்தைவிட அதிகம். எனவே, தங்கத்தை முதலீடு செய்வதில் உள்ள ஆர்வத்தைக் குறைத்து, வேறு பொருள்களில் முதலீடு செய்ய வேண்டும்.
தங்கம், பெட்ரோல் தேவை அதிகரிப்பால் பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. எனவே, தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை அரசு அதிகரிக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதார உற்பத்தித் திறனை அதிகரிக்க அஞ்சலகங்கள், வங்கிகளில் வைப்புத்தொகைகளுக்கு (டெபாசிட்) அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
தகவல்: அசோசேம்