பெரியாரை அறிவோமா?

பிப்ரவரி 16-29

1)    தம் மனைவி நாகம்மையார் இறந்தபோது பெரியார் அவர்கள் எடுத்த முடிவு

அ) வாழ்க்கையையே வெறுத்துவிட்டார் ஆ) அனாதை ஆகிவிட்டேன் என்றார்
இ) இனிமேல் இன்னும் தீவிரமாகப் பொதுப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றார் ஈ) நான் விதவன் ஆகிவிட்டேன், நான் இனி மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என்றார்.

2)    1959 இல் வடநாட்டில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்ய பெரியாரை அழைத்த கட்சி எது?

அ) காங்கிரஸ் கட்சி ஆ) கம்யூனிஸ்டு கட்சி இ) அகில இந்திய ரிபப்ளிக்கன் கட்சி
ஈ) அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கட்சி.

3)    தன்னிகரற்ற தலைவராக விளங்கிய பெரியார் தம்முடைய தலைவராக ஏற்றுக் கொண்டது யாரை?

அ) காந்தியடிகள்    ஆ) சாக்ரடீஸ் இ) ஞானியாரடிகள் ஈ) யாருமில்லை.

4)    “கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் உள்ள இரு பெண்களிடம் (கண்ணம்மாள், நாகம்மையார்) இருக்கிறது அவர்களைத்தான் கேட்க வேண்டும். இது யாருடைய கூற்று?

அ) காந்தி    ஆ) நேரு இ) சங்கரன் நாயர்    ஈ) மாளவியா

5)    தந்தை பெரியார் காங்கிரசில் இருந்த போது ஆலயப் பிரவேசம் தீர்மானத்தைக் கொண்டு வந்த மாநாடு எது?

அ) 1919 திருச்சி மாநாடு ஆ) 1921 தஞ்சை மாநாடு இ) 1922 திருப்பூர் மாநாடு ஈ) 1925 காஞ்சிபுரம் மாநாடு

6)    லெனினும் மதமும் என்ற நூலைப்  பெரியார் வெளியிட்ட நாள் எது?

அ) 2.10.1932  ஆ) 11.12.1931 இ) 17.09.1937    ஈ) 30.01.1948

7)    சர்க்கார் (அரசாங்க) உத்தியோகத்தை. . . . . என்று கருதாமல் பொறுப்புடன் வேலை செய்யக் கண்டிப்பு வைக்க வேண்டும் பெரியாரின் இந்தக் கூற்றில் விடுபட்ட இடத்திற்கான சரியான சொற்கள் யாவை ?

அ) சுயலாபத்திற்கு ஆனது   ஆ) நமது சொந்த வேலை அல்ல இ) சத்திரம்,  சோம்பேறி மடம் ஈ) யாருக்கோ பணி செய்கிறோம்

8)    பின்வரும் பெரியாரின் கூற்றில் கோடிட்ட இடத்தில் இருக்க வேண்டிய சொல் யாது?  இன்றுள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் எங்களை ஒழிக்கப் பாடுபடுகிறார்களே தவிர …………. ஒழிய வேண்டியதற்கான பரிகாரம் என்னவென்பது பற்றி ஒருவனும் கவலைப்படுவது கிடையாது

அ) படிப்பு இன்மை ஆ) மூடநம்பிக்கை இ) ஜாதி ஈ) மதவெறி

9)    தமது மூடநம்பிக்கை ஒழிப்புக் கொள்கைக்கு வெற்றியளிப்பவை என பெரியார் கூறியவை எவை?  அ) இயற்கைப் போக்கு,  விஞ்ஞான வளர்ச்சி ஆ) மக்களின் கூர்த்த அறிவும் ஆர்வமும் இ) அரசாங்கத்தின் ஆதரவும் சட்டமும் ஈ) கல்விக்கூடங்கள் அதிகரித்தல்

10)    சுறுசுறுப்பின் மறுபெயர் ஈ.வெ.ரா. என்று புகழ்ந்து எழுதிய தமிழறிஞர்

அ) டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் ஆ) டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
இ) டாக்டர் முத்துக் கண்ணப்பர் ஈ) டாக்டர் மா.இராசமாணிக்கனார்

 

விடைகள் :

1.இ

2.இ

3.ஈ

4.அ

5.இ

6.ஆ

7.இ

8.இ

9.அ

10.ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *