இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவும் தாய்லாந்தும் ஜனவரி 25 அன்று கையெழுத்திட்டன.
புதுவை மாநிலத்தின் மேனாள் முதல் அமைச்சரும், தற்போது கேரளா ஆளுநருமான பரூக் மரைக்காயர் ஜனவரி 26 அன்று மரணமடைந்தார்.
மணிப்பூரில் ஜனவரி 27 அன்று நடைபெற்ற தேர்தலில் 82 சதவீத ஓட்டுப் பதிவானது. துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர்.
இஸ்ரோ மேனாள் தலைவர் மாதவன் (நாயர்) பாட்னா அய்.அய்.டி.நிர்வாகக் குழு பதவியை ஜனவரி 28 அன்று ராஜினாமா செய்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேங்கினால் மூழ்கும் பகுதிகள் குறித்து மத்திய சர்வே துறை அதிகாரிகள் ஜனவரி 28 அன்று ஆய்வு செய்தனர்.
பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஜனவரி 30 அன்று நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 70 சதவிகித ஓட்டுகள் பதிவாகின.
குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரில் ஆந்திர மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் பி.பி.ஆச்சார்யா ஜனவரி 30 அன்று கைது செய்யப்பட்டார்.
மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தமிழக அரசு ஜனவரி 30 அன்று திரும்ப (வாபஸ்) பெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 31 அன்று மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித் ததுடன் ஜனவரி 31 அன்று தள்ளுபடி செய்து விரைந்து முடிக்கும்படி கருநாடக நீதிமன்றத்திற்கு ஆணையிட்டுள்ளது.
நில முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி எடியூரப்பா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஜனவரி 31 அன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக சட்டசபையில் அநாகரிகமாக நடந்து கொண் டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பிப்ரவரி 2 அன்று 10 நாள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிப்ரவரி 4 அன்று பேசி முடித்துவிட்டுப் புறப்பட்ட முலாயம் சிங் யாதவ் மீது பெண் ஒருவர் செருப்பு வீசினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பிப்ரவரி 6 அன்று ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளி பதிவான நிலநடுக்கத்தில் 44 பேர் உயிரிழந்தனர்.
மாலத்தீவின் முதல் ஜனநாயக ஆட்சி பிப்ரவரி 7 அன்று முடிவுக்கு வந்ததையடுத்து அதிபர் முகமது நஷீத் பதவி விலகினார். புதிய அதிபராக முகமது வாகீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 64 சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் செல்பேசியில் ஆபாச படம் பார்த்த பா.ஜ.க. அமைச்சர்கள் லட்சுமன் சவதி, சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ண பாலேமர் பிப்ரவரி 8 அன்று ராஜினாமா செய்தனர்.
சென்னை பாரிமுனை அருகிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவன் இர்பான் பிப்ரவரி 9 அன்று ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்திக் கொலை செய்தான்.