முப்பெரும் தேவியர் கப்பல் இறக்குமதி? – மருத்துவர் ஷாலினி

2022 ஆகஸ்ட் 01-15 2022 மற்றவர்கள்

முப்பெரும் தேவியரான பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவருமே கிரேக்க இறக்குமதி என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆனால், அது தான் உண்மை.
கிரேக்க புராணத்தில் ஹீரா என்பவள் மலைமகள். அஃரதைத்தி கடலில் இருந்து சாகாவரம் கொண்டு வந்த அலைமகள். எதெனா கல்விக்கான கலைமகள்.
இந்த மூன்று கடவுளர் உருவான கதை, தோற்றம், அய்கனோகிராபிஃக் குறியீடுகள் எல்லாம் அச்சு அசல் அப்படியே காப்பி அடித்து, இவர்கள் இந்தியக் கடவுளர் ஆனார்கள். பிறகு ஹிந்து பாந்தியனிலும் இவர்கள் இடம் பெற்றார்கள்.

எவ்வளவு நுணுக்கமாய் என்றால், கல்விக்குக் கடவுளான எதெனாவிற்கு உரிய பறவை ஆந்தை. அதே ஆந்தை தான் கல்வியின் இந்திய டூப்பு சரஸ்வதிக்கு உகந்த பறவை. எதெனாவிற்கு உகந்த நிறம் வெள்ளை. நம்ம சர்ஸுவும் “வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்”. எதென்னாவின் கையிலும் அவர்கள் ஊரின் இசைக்கருவி இருக்கும்…. சரஸ் “வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்”
இப்போது லாஜிக்காய் நமக்குத் தோன்றும் கேள்வி: நம்ம சரஸை கிரேக்கர்கள் காப்பி அடித்தார்களா? அல்லது கிரேக்க எதனாவை நாம் காப்பி அடித்தோமா?
Looks like நாம தான் எதனாவை காப்பி அடித்திருக்கிறோம். காரணம். நம்மூரில் இந்தப் பெண் கடவுள்களைப் பற்றிய பேச்சு எழுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இந்தத் தேவியரை சிலைகளாய்ச் செய்து விட்டார்கள்!
இந்தச் சமயத்தில் நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்: தமிழர்கள் பல்நெடுங்கால-மாய் கிரேக்கர்களோடு தொழில் செய்து வந்தவர்கள். கிரேக்கர்களது சிற்பக் கலையை உள்வாங்கியவர்கள்.

கிரேக்க மாலுமிக்கு விருப்பமான தெய்வம் அதிக நன்மை செய்திருந்தால், அந்த கிரேக்க சாமியைக் கும்பிட நாம் என்ன தயங்கியா இருப்போம்?!
இப்படி தொழில் தொடர்பு மூலம் கிரேக்க கலாச்சார குறியீடுகள் தமிழ்நாட்டில் முதலில் பரவி, இங்கிருந்து தான் வட நாடு வரை போயிருக்க வாய்ப்பு அதிகம்!
அல்லது option 2, மேசிடோனிய அரசன் அலெக்சாண்டர் இந்தியாவை அடைந்து, அவன் ஆள்களை வைத்து இங்கே ஆட்சி செய்த காலத்தில் பரவிய நம்பிக்கையாக இருக்கலாம்.
ஆனால் அலெக்ஸாண்டர் கிரேக்க மன்னன் இல்லை. அவனுக்குக் கடல் வழியாக இந்தியாவிற்கு வரும் எண்ணமே வரவில்லை….. ஏனெனில், அவன் உலகம் தட்டை என்று நம்பினான். ஆக, பல நூறு ஆண்டுகளாக கிரேக்கத்திற்கும் நமக்கும் இடையில் இருந்து கடல் வழிப் பாதையைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
எது எப்படியோ, கிரேக்கக் கடவுள் எதனாவிற்கு அவர்கள் ஊரில் பூசை போடுகிறார்களோ இல்லையோ, நாம் இங்கே போடுகிறோம். நாம் எவ்வளவு cosmopolitan மக்கள்!!