மறைவு: 7-8-2018
பகுத்தறிவுக் கண்கொண்டு பார்த்து கருத்து களைக் கூறும் திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி.நடராசன் அவர்கள்.
அவர் பிறந்தது 12.11.1912. பெற்றோர் விசயரங்கம், தனலட்சுமி ஆகியோர் ஆவர். இந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது. இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான் அந்தக் கைக்குழந்தை. பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.) சிறைக்கோட்டம் சென்றவர். ‘திராவிடன்’ என்னும் இதழை நடத்தி வந்தார். திமுக.வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நாளும் உழைத்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை பல சென்றவர்.
ஆனந்தபோதினியில் அச்சுக் கோர்ப்பவராக யிருந்து விடாமுயற்சியாலும், இலட்சியப் பற்றாலும் மேல்நிலைக்கு வந்தவர். இவரைப் பற்றி தந்தை பெரியார் கூறினார். இவர் எனது தனிச் செயலாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மை யானவராகவும் (ஷிவீஸீநீமீக்ஷீமீ) இருந்து பணி புரிந்தவர் என்று கூறினார்