பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சும் ரோபோ மீன்களை சீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆழ்கடலில் காணப்படும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சும் மீன் வடிவிலான சிறிய ரோபோவை, சீன விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த ரோபோ மீன் 1.3 செ.மீ நீளம் கொண்டவை
அகச்சிவப்பு ஒளிகதிர் மூலம் இயங்கும் இந்த மீன், கழிவுகளை உறிஞ்சி சேதமடைந்தாலும் தன்னைத் தானே மீட்டெடுக்கும் திறன் உடையது.
மற்ற ரோபோக்களை விட வேகமாக நீந்தும் திறன் கொண்ட இந்த ரோபோ மீன், கடலில் ஏற்பட்டுள்ள மாசு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது.
வேறு மீன்கள், இந்த ரோபோ மீனை முழுங்கி விட்டால் கூட, முழுவதும் பாலியூரிதீன் பொருள்களால் தயாரிக்கப்பட்டுள்ளதால், செரிமானம் ஆவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.