மறைவு – 7.8.2018
“கலைஞர் அவர்கள் நமக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம் என்று சொல்ல வேண்டும். நமது கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி. பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும், முன்யோசனையுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்கட்குப் புதுவாழ்வு தருபவராகிறார் நமது கலைஞர். தி.மு.கழகத்திற்குப் பெருவெற்றி என்றால், அது கலைஞர் அவர்கள் தனது சாதுர்யத் திறமையால் பெற்றதாகும்.
கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப் பருவத்திலிருந்து பொதுத் தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாகிய சிறை செல்லும் தன்மையில் பல முறை சிறை சென்றிருக்கிறார். ஒரு கட்சியைத் தொடங்கி, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து, அந்தக் கட்சியை நல்லவண்ணம் உருவாக்கி, அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனம் ஆக்கிய முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் இருக்கிறார். கலைஞர் அறிவில் சிறந்தவர்; நிருவாகத்தில் சிறந்தவர்; பொதுத் தொண்டுக்காகத் தியாகம் செய்ததில் சிறந்தவர். இப்படி கலைஞர் கருணாநிதி விஷயத்தில் பாராட்டத்தக்க பல தன்மைகள்இருக்கின்றன.”
– தந்தை பெரியார்