இன்று உலகளவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளில் ஆண் _ பெண் சமத்துவம் முதன்மை பெற்றுள்ளது. அந்த வகையில் ஆண் செய்யும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் செய்ய முடியும் என்பதற்கு அன்றாடம் புதிய சாதனைப் பெண்களை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகை முன்மாதிரியாக, இந்திய மீன்பிடிக் கப்பலின் முதல் பெண் கேப்டன் என்கிற பெருமையைப் பெறுகிறார் கேரளாவைச் சேர்ந்த கே.கே.ஹரிதா என்ற 25 வயதுப் பெண்.
கேரளாவில் ஆலப்புழாவில் எழுபுன்னா பஞ்சாயத்தைச் சேர்ந்தவர், கொச்சியில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் நாட்டிகல் & இன்ஜினியரிங் டிரெயினிங் (சிமிதிழிணிஜி) நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்.
மீன்பிடிப் பின்புலம் ஏதும் இல்லை இவருக்கு. இவரது தந்தை பிளம்பிங் வேலை பார்ப்பவர்; தாயார் இல்லத்தரசி; சகோதரர் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். அவரின் வெற்றிப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில்,
“2-016ஆம் ஆண்டு, ஃபிஷ்ஷிங் & நாட்டிகல் சயின்ஸ் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, கேப்டன் அருண் என்பவர் வகுப்பில் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, “கேப்டன் ஹரிதா, நீங்கள் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!’’ என்று சொல்லியிருக்கிறார். அன்று முதலே நான் உண்மையிலேயே ஒரு கேப்டன் ஆகவேண்டும் என முடிவு செய்தேன்.
பின்னர் பிராஷிக்ஷானி என்னும் பயிற்சிக் கப்பலில் ஊழியராகப் பணியில் சேர்ந்தேன். சுமார் 180 நாள்கள் அதிலேயே பயணம் மேற்கொண்டேன். மீன்பிடிக் கப்பல் ஒன்றின் முதல் பெண் ஊழியரும் நான் மட்டுமே.
அதன் பின்னர் தலைமை அதிகாரியாகத் தேவையான ‘மேட் ஆஃப் ஃபிஷ்ஷிங் வெஸெல்ஸ்’ என்னும் தேர்வை எழுதி அதிலும் வென்றேன்.
2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி, தலைமை அதிகாரி என்னும் உயர் பதவியை எட்டினார். சிமிதிழிணிஜி வரலாற்றிலேயே இந்தச் சாதனையைப் படைத்த ஒரே பெண் இவர் என்னும் பெருமையும் என்னை வந்து சேர்ந்தது.
பிராஷிக்ஷானி கப்பலிலும் லாவணிகா என்னும் கப்பலிலும் 450 நாள்கள் கடற்பயணம் மேற்கொண்டேன். லட்சத் தீவுக் கடற்கரையை அடைந்தேன். அது தமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய பொறுப்பு என நினைக்கிறேன்.
செப்டம்பர், 2021இல் ஆஸ்திரேலியா விலிருந்து அமெரிக்காவுக்குக் கடற்பயணம் மேற்கொண்டேன்.
கடற் கொந்தளிப்பு சமயங்களில் கப்பலைச் செலுத்துவது சவால் நிரம்பிய ஒன்றாகும். மீன் பிடித்தல் என்பது அபாயம் நிறைந்த தொழில் 32 ஆண்களுடன் நான் ஒருத்தி மட்டுமே பெண்’’ என்று தனது பயண அனுபவத்தைப் புன்னகையுடன்’’ சொல்லுகிறார்.
எத்தகைய சவால்கள் இருந்தாலும் அவற்றை ஆண்கள் சமாளித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? ஆண்களால் செய்யப்படும் போது அதை ஏன் பெண்களாலும் செய்ய முடியாது? என்பதுதான் எனது வாதம்!
நம் சமுதாயத்தில் ஒரு மூடநம்பிக்கை இன்னும் சிலரிடம் இருக்கிறது. சவால்கள் நிரம்பிய பணிகளைப் பெண்கள் செய்யத் தகுதியற்றவர்கள் என்பதே அது. அத்தகைய நம்பிக்கையைப் பொடிப் பொடியாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. பெண்கள் எத்தகைய கடினமான பணிகளையும் மேற்கொண்டு வெற்றி காண்பார்கள்; அந்த திறமை அவர்களுக்கு இருக்கிறது!’’ என்று உறுதியாகச் சொல்கிறார்.ஸீ