நூல்: தொலைக்காட்சி தொழில்நுட்பம்
ஆசிரியர்: தமிழ்தாசன்
வெளியீடு: சாஃப்ட்வியூ பதிப்பகம்,
118, நெல்சன் மாணிக்கம் சாலை,
அமைந்தகரை, சென்னை -_ 29.
தொலைப்பேசி: 044_2374 1053
மொத்தப் பக்கங்கள்: 80, விலை ரூ.60/-
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்து, மனித வாழ்வில் பிரிக்கமுடியாத ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகத் திகழும் தொலைக்காட்சியில் நாம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குமுன் நடைபெறும் செயல்முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட முறையினைக் கூறி, அதன் படிப்படியான வளர்ச்சி நிலைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்த அனலாக் தொழில்நுட்பம் விளக்கப்பட்டு, தற்போதைய பயன்பாட்டில் இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் விவரிக்கப்பட்டுள்ளது.
வீட்டினுள் இருந்து கொண்டே நாம் பார்த்து ரசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு முறைகள், ஒலி, ஒளி அமைப்பின் தன்மைகள் படங்களுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோளின் உதவியுடன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் விதம், நேரடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதம், லென்சின் வகைகள் என அனைத்துத் தொலைக்காட்சி தொழில்நுட்பங்களையும் தன்னகத்தே தாங்கியுள்ளதே தொலைக்காட்சி தொழில்நுட்பம்.
– செல்வா