இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களைக் காப்பாற்றுவதற்காக 1991இல் திருத்தப்பட்டது, ‘வழிபாட்டு இடங்களுக்கான சிறப்புச் சட்டம்’.
இதன்படி இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டான 1947 முதல் வழிபாட்டு இடங்கள் எப்படி இருக்கின்றனவோ, அப்படியே இருக்கும்படியான நிலையைக் காப்பாற்றுவது. அதைவிடுத்து, ‘16ஆம் நூற்றாண்டில்அவுரங்கசீப் கோயிலை இடித்து மசூதி கட்டினார். அதனால் அந்த இடத்தில் மீண்டும் கோயிலைக் கட்டும் உரிமை வேண்டும்’ என்ற கேட்பது இந்தச் சட்டத்துக்குப் புறம்பானதும், தண்டனைக்குரியதுமாகும்.
ஆனால், அண்மைக்கால சர்ச்சையாகி யிருக்கும் வாரணாசி கியான்வாபி மசூதி குறித்து மாவட்ட நீதிமன்றம் இந்த மசூதியைத் தோண்டிப் பார்த்து ஆய்வு செய்யும்படி கைகாட்டி இருக்கிறது.
‘இந்தச் செயல் வழிபாட்டு இடங்களுக்கான சிறப்புச் சட்டத்தை மீறுவது ஆகும். அத்துடன் சிறுபான்மையினரைக் குறி வைக்கிறது’ எனக் குற்றம் சாட்டுகின்றனர் இந்திய சட்ட வல்லுநர்கள்.