பதிவுகள்

ஏப்ரல் 01-15
  • மக்கள் புரட்சிக்குப்பின், எகிப்தில் புதிய அமைச்சரவை மார்ச் 8 இல் பதவிப் பொறுப்பேற்றுள்ளது.
  • பள்ளிகள் அருகே தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடைவிதித்தும், தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 9இல் ஆணையிட்டுள்ளது.
  • உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங்கின் மகன்  அகிலேஷ் மார்ச் 9 இல் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்பற்றி சி.பி.அய் மேலும் 3 வழக்குகளை மார்ச் 10 இல் பதிவு செய்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களின் 18 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
  • அமெரிக்க விண்கலம் டிஸ்கவரி 13 நாள் விண்வெளிப் பயணத்தை முடித்து மார்ச் 10 இல் புளோரிடாவில் தரை இறங்கியது.
  • ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 8.9 என்ற அளவில் சுனாமியும் பூமி அதிர்ச்சியும் ஏற்பட்டு மார்ச் 11 இல் பெரும்அழிவு ஏற்பட்டதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட பிருதிவி _ 2 ஏவுகணை ஒரிசாவின் பாலாசோருக்கு அருகிலுள்ள சந்திப்பூர் சோதனை மய்யத்திலிருந்து மார்ச் 11 இல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையாளர் பணியிலிருந்து உச்ச நீதிமன்றத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட பி.ஜே.தாமஸ், பணி நீக்க உத்தரவை எதிர்த்து மார்ச் 12 இல் மனு தாக்கல் செய்துள்ளார்.
  • முல்லைப் பெரியாறு அணையில் நவீன ரக இயந்திரம் மூலம் மத்திய மண்பொருள் ஆராய்ச்சிக் குழுவினர் மார்ச் 12 இல் ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
  • விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துவது சட்டவிரோதம் அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 15 இல் ஆணையிட்டுள்ளது.
  • அய்ம்பதாயிரம் கோடி வரி ஏய்ப்புப் புகாரில், குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலிக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் மார்ச் 17 இல் ரத்து செய்ததையடுத்து, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் அன்று இரவு சரணடைந்துள்ளார்.
  • மனித உறுப்புகளைத் திருடுவோருக்குத் தண்டனையைக் கடுமையாக்கும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை மார்ச் 17 இல் ஒப்புதல் அளித்துள்ளது.
  • கொடநாடு எஸ்டேட் நடைபாதையை மக்களின் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும் திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மார்ச் 18 இல் ஆணையிட்டுள்ளது.
  • எகிப்தில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான மக்கள் கருத்து வாக்கெடுப்பு மார்ச் 19 இல் நடைபெற்றுள்ளது.
  • சென்னை புறநகர் புதிய காவல்துறை ஆணையராக கரன் சின்கா மார்ச் 21 இல் பொறுப்பேற்றுள்ளார்.

ஜப்பான் சுனாமி

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *