கடவுள் வாழும்(?) கோவிலிலே…

ஜனவரி 16-31
  • வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் சுற்றுச் சுவர், அகழியின் பக்கச் சுவர்களில் வளர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொல்பொருள் துறை ஊழியர் பழனி (48) பிடித்திருந்த சுவரின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்ததில்  உயிரிழந்தார்.
  • சென்னை, கொருக்குப்பேட்டை பாரத்நகர் தெருவில் உள்ள வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்திலிருந்த சங்கிலி, உண்டியல் பணம் மற்றும் கோவிலின் உள்ளேயிருந்த ரூ.25,000 மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை, அம்பத்தூர் ஆசிரியர் காலனி அண்ணா தெருவில் வசிக்கும் மீனுமேரி (27) அவரது தாய் ஷீலா வர்கிசுடன் கிறிஸ்துமஸ் அன்று தேவாலயத்திற்குச் சென்று வழிபட்டு வீடு திரும்பும்போது மர்ம நபர்கள் வழிமறித்து அவர்கள் அணிந்திருந்த 6 சவரன் சங்கிலியினைப் பறித்துச் சென்றுள்ளனர்.
  • பெங்களூர் அருகே உள்ள நித்தியானந்தா சாமியாரின் ஆசிரமத்திலுள்ள ஆனந்தீஸ்வரர் கோவிலில் சாமி கழுத்திலிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், உண்டியல் பணம் அனைத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
  • சென்னை, அம்பத்தூர் அருகே உடையார்பாளை யம் செல்லியம்மன் நகர் விரிவு மகாத்மா காந்தி சாலையில் வசிக்கும் பிலீப் குஞ்சுமோன் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் புத்தாண்டுப் பிரார்த்தனைக்கு நள்ளிரவு சர்ச்சுக்குக் கிளம்பி வீட்டின் கதவைத் திறந்து வெளியில் வந்துள்ளார். அங்கு நின்றிருந்த 4 வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 13 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *