அவர் என்ன செஞ்சார்
தமிழகத்துல ஒரு அம்மா தொல்லை தாங்கலைனா, மறுபக்கம் இன்னொரு அம்மா தொல்லைங்க, என் அம்மாவின் வற்புறுத்தலால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தக் கோவிலுக்குச் செல்ல நேர்ந்தது. பெண்கள் எல்லாம் இருமுடி கட்டிட்டு மேல்மருவத்தூர் அம்மாவைப் பார்க்க வரிசையில் நின்றனர். அப்போது பங்காரு அவர்கள் சட்டைபோடாமல் வேகமாக நடந்து வருவதும் பெண்கள் எல்லாம் அம்மா, அம்மா எனக் கதறி காலில் விழுந்ததும் என்ன கொடுமைங்க (அம்மானாலே கால்ல விழுகணுமா?). அதாவது பரவாயில்லைங்க, எல்லாப் பெண்களும் அவர் படம் பொறித்த தங்கக் காசை வாங்கித் தாலியில் கோர்த்துக் கொண்டனர். ஆக இப்போது, பங்காரின் உருவம் பொறித்த தாலியினை மேல்மருவத்தூர் பக்தைகள் நெஞ்சில் சுமக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நான், பக்கத்தில் ஒரு தாத்தாவும் பாட்டியும் பேசிக் கொள்வதைக் காதில் கேட்க முடிந்தது.
தாத்தா: ஏண்டி இந்த வயசுல கண்டவன நெஞ்சுல சுமக்குற?
பாட்டி: இல்லைங்க, அவராலதான் நாம் கஷ்டம் எல்லாம் தீர்ந்து ஒரு நல்ல நிலமைக்கு வந்து இருக்கிறோம்.
தாத்தா: நான்தானடி உழைச்சேன், அவர் என்ன செஞ்சார்?
பாட்டி: நமக்கு ரொம்ப நாள் குழந்தை இல்லாம இருந்தபோது அவர்தானே குழந்தை கொடுத்தார். தாத்தா: அடிப்பாவி அப்போ குழந்தைக்கு நான் காரணம் இல்லையா???
தாத்தாவுக்கு இந்த வயதில் ஒரு சக்களத்தான், கொடுமையோ கொடுமை.
– பிரதிபா, சென்னை