மனுதர்மத்தில்..
மனுதர்ம சாஸ்திரத்திலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுலோகமும் சமுதாயத்தில் பார்ப்பனர் உயர்வுக்காக மட்டும் அல்லாது ஒவ்வொரு பார்ப்பனர் பொருளாதார உயர்வுக்காக வும் எழுதப்பட்டதாகும். மனு தர்ம சாத்திரம் எட்டாவது அத்தியாயம் சுலோகம் 37 முதல் 39 வரை புதையலைப்பற்றி கூறியுள்ளது.
சுலோகம் 37: வித்துவானான பிராமணனுக்கு/ பார்ப்பனனுக்கு புதையலகப்பட்டால் முற்றும் அவனே எடுத்துக் கொள்ளலாம். அதேனெனில் அவன் எல்லோருக்கும் மேலானவனல்லவா!
சுலோகம் 38: அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியைப் பிராமணர்க ளுக்குத் (பார்ப்பனனுக்கு) தானஞ்செய்து மற்றதைத் தன் பொக்கிஷத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது.
சுலோகம் 39: பிராமணன் தவிர மற்றவர் களுக்கு பூமியிலிருந்து அகப்பட்ட இரத்தினம் முதலிய புதையல்களில் அரசனுக்குப் பாதிக் கொடுக்க வேண்டியது ஏனெனில் அவன் பூமிக்கு யஜமானல்லவா!
ஆக பார்ப்பான் பூமியிலிருந்து புதையல் எடுத்தால் முற்றிலும் அவனே எடுத்துக் கொள்ள வேண்டியது. அரசனோ அன்றைய ஆட்சியாளரோ பார்ப்பனரிடம் கேட்க முடியாது. காரணம், அவன் அரசனை விட மேலானவன்/உயர்ந்தவன். அரசனே புதையல் எடுத்தாலும் அதில் பாதியைப் பார்ப்பனனுக்குக் கொடுத்துவிட வேண்டியது. காரணம், பார்ப்பனன் அரசனைவிட உயர்ந்தவன். அதே சமயம் மற்ற வர்ணத்தார் புதையல் எடுத்தால் அதில் பாதியை அரசனுக்குக் கொடுத்துவிட வேண்டியது.
இவ்வாறு ஆட்சி செய்த மூவேந்தர்களைத் தான் மனுநீதி வழுவாது ஆட்சி செய்தார்கள் என்று பார்ப்பன வரலாற்று ஆசிரியர் கூறுவர்.
– ஆர்.டி.மூர்த்தி, திருச்சி-17