பெரியாரை அறிவோமா?

ஜனவரி 01-15

1)  பெரியாரின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய அவர் குடும்பத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி?

அ) பார்ப்பனர்களுக்குத் தானம் தருவது ஆ) புராண இதிகாசக் கதாகாலட்சேபங்கள் இ) ஜாதி வேற்றுமை பார்ப்பது ஈ) சகோதரியின் மகள் விதவையானது.

2) பெரியார் அவர்கள் 1934 முதல் 1959 முடிய 25 ஆண்டு காலத்தில் தாம் ஒத்துக்கொண்ட ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் போக முடியாமல் போனதற்குக் காரணம்?

அ) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

ஆ) மனைவி மறைவுற்றதால் இ) கடுமையான வெள்ளத்தில் கார் சிக்கி ஓட முடியாமல் பழுதானதால்  ஈ) காவல் துறை அனுமதிக்காததால்.

 

3)    கடவுள் இல்லை என்று கூறுகிறீர்களே கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்ட அன்பருக்கு அய்யாவின் பதில்?

அ) நீதான் கடவுள் என்பதற்கான ஆதாரம் கேட்பேன் ஆ) வந்துவிட்டால் கடவுள் உண்டு என்று ஒத்துக்கொள்வேன் இ) கடவுளிடம் மன்னிப்புக் கேட்பேன் ஈ) கடவுளை அடித்துத் துரத்தி விடுவேன்

4)    ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்து பெரியாரைத் துணைத்தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்ட சங்கத்தின் பெயர் யாது?

 

அ) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆ) அதி தீவிரவாதிகள் சங்கம் இ) ஹோம் ரூல் இயக்கம் ஈ) சென்னை மாகாணச் சங்கம்

5)    வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்ள பெரியாரை அழைத்திடக் காரணம் . . . . .

அ) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆ) தீண்டாமையை ஒழிப்பதில் தீவிரமானவர் என்பதால் இ) திருவாங்கூர் அரசருக்கு நண்பர் என்பதால் ஈ) காந்தியாரின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால்.

6)    தந்தை பெரியார் அவர்களால் இராமாயண ஆராய்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி,  பாரத ஆராய்ச்சி முதலிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவரச் செய்யப்பட்ட காலம் எது?

அ) 1945 ஆ) 1929 இ) 1946 ஈ)  1925

7)    இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறைகள் எவற்றை மதத்தில் பெரியார் காண்கிறார்?

அ) மக்களை ஒழுக்கமாய் நாணயமாய் நடக்கச் செய்ய முடியவில்லை ஆ) கூடிவாழும் தன்மையை மக்களுக்கு ஊட்டவில்லை இ) வேசங்களிலும் பக்தியிலும் மக்களைத் திருப்தியடையச் செய்கிறது ஈ)  மேற்கூறிய எல்லாம்.

8)    நம்மில் பெரும்பாலோர் அறிவற்றவர்களாக இருக்கக் காரணங்கள் என பெரியார் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

அ) கல்விக்கூடங்கள் போதிய அளவு இன்மை ஆ) மெகாலே புகுத்திய கல்வித் திட்டம் இ) இயற்கைத் தன்மையைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பது இல்லை;  இயற்கைக்கு மாறுபாடான கடவுள், மதம், தெய்வீகம், தெய்வீக முன்னோர்கள் கண்ட முடிவு என்பனவற்றிக்கு அடிமையாகிவிட்டோம் ஈ) தேர்தல், அரசியல், திரைப்படங்கள், பத்திரிகைகள்

9)    பொதுவுடைமை மலர்ச்சி காண திராவிடர் கழகம் எவ்வாறு முயல்கிறது என்கிறார் பெரியார்?

அ) அறிவு வழியிலும் அமைதி வழியிலும்  ஆ) நாட்டுப் பிரிவினையின் மூலம் இ) புரட்சியின் மூலம் ஈ) பொதுவுடைமை நாடுகளின் துணையுடன்.

10)    சுயமரியாதைத் திருமணங்கள் முன்தேதியிட்டு செல்லும் என்ற சட்டத்தை அண்ணா நிறைவேற்றிய நாள் எது?

(அ)  27.-11.-1967 (ஆ) 10-.12.-1968 (இ) 17.-9-.1968 (ஈ)  10.-1-.1969

 

 

பெரியாரை அறிவோமா விடைகள்

1. ஈ

2. இ

3. ஆ

4. ஆ

5. ஆ

6. ஆ

7. ஈ

8. இ

9. அ

10. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *