செய்திக்கூடை

ஜனவரி 01-15
  • தமிழகத்தில் 2012-_2013ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ முறையும் மதிப்பெண்களுக்குப் பதில் கிரேடு முறையும் அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • மலேசிய நாட்டின் புதிய மன்னராக அப்துல் ஹலீம் பொறுப்பேற்றுள்ளார்.
  • நாகை மயிலாடுதுறையினை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிகுலேசன் பள்ளியில் 10ஆம் வகுப்புப் படிக்கும் மாணவிகள் புங்க மர விதையிலிருந்து பயோ டீசலை எடுத்து கார் என்ஜினை இயக்கிக் காட்டியுள்ளனர்.
  • லிபிய நாட்டின் மேனாள் அதிபர் கடாபியும் அவரது மகனும் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என கடாபியின் மகள் ஆயிஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
  • பசிபிக் பெருங்கடல் மண்டலத்தில் உள்ள சிறிய நாடான பபுவா நியு கினியா நாட்டில் மைக்கேல் சோமரே, ஒநெயில் என்ற இரு பிரதமர்கள் உள்ளனர்.
  • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டினாலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர முத்தரப்பு ஒப்பந்தத்திற்குத் தயார் என கேரள முதல் அமைச்சர் உம்மண் சாண்டி தெரிவித்துள்ளார்.
  • முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் சென்னை பாஸ்போர்ட் சேவை மய்யத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
  • தீ விபத்தினால் தோல் கருகிய இடத்தில் திசுக்கள் வளர ஹைட்ரோ ஜெல் வடிவிலான மருந்தினை அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹோப்கின் தோல் மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • ரஷ்யாவிடமிருந்து நெர்பா என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகள் குத்தகைக்கு வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
  • அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்யும் நோக்கில் புதிய கட்டுமானப் பணி எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • இங்கிலாந்தின் மேற்கு லண்டன் (பெல்காம் _ஹாஸ்டன்) நாடாளுமன்றத்திற்கு நடை பெற்ற இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா மல்கோத்ரா என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.
  • பெண்களுக்கென்று தனி சமூக இணையதளத்தை கனடா நாட்டைச் சேர்ந்த பெண்மணி உருவாக்கியுள்ளார். (Luluvise.com)
  • உத்திரபிரதேச மாநிலத்தை நான்காகப் பிரிக்கும் தீர்மானத்திற்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளது.
  • வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் மாரடைப்பால் மரணமடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *