பதிவுகள்

ஜனவரி 01-15

  • கொல்கத்தாவில் டிசம்பர் 9 அன்று தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 93 பேர் உயிரிழந்தனர்.
  • இந்தியப் பெருங்கடலின் பகுதியான செசல்ஸ் தீவில் ராணுவத் தளத்தினை அமைக்கப் போவதாக சீனா டிசம்பர் 12 அன்று அறிவித்துள்ளது.
  • ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள தனகஷிமா விண்வெளி மய்யத்திலிருந்து தகவல் தொடர்பு செயற்கைக்கோள் தாங்கிய ஹெச் – 2ஏ ராக்கெட் வெற்றிகரமாக டிசம்பர் 12 அன்று ஏவப்பட்டது.
  • முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை டிசம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன் மனுவையும் தள்ளுபடி செய்தது.
  • முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்ற தீர்மானம் தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் டிசம்பர் 15 அன்று நிறைவேறியது.
  • கூடங்குளம் அணுமின் பிரச்சினையில் மத்திய நிபுணர் குழு டிசம்பர் 15 அன்று நடத்திய மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
  • முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட்டுத் தீர்வு காண உத்தரவிட வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை டிசம்பர் 15 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
  • பாகிஸ்தானுக்கு ரூ. 5,500 கோடி ராணுவ நிதி உதவியை நிறுத்தி வைக்கும் சட்ட முன்வரைவு டிசம்பர் 15 அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
  • கூடங்குளம் அணுமின் உலை ஒரு சில வாரங்களில் செயல்படத் தொடங்கும் என்று ரஷ்யாவிலிருந்து இந்தியப் பிரதமர்  மன்மோகன்சிங் டிசம்பர் 16 அன்று அறிவித்தார்.
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக பெண் நீதிபதி எஸ். விமலா உள்பட கே.ரவிச்சந்திர பாபு, ஆர்.கருப்பையா, பி.தேவதாஸ் ஆகியோர்  டிசம்பர் 20 அன்று பொறுப்பேற்றனர்.
  • கேபிள் டி.வி.யை டிஜிட்டல் மயமாக்கும் சட்டமுன்வரைவு நாடாளுமன்றத்தில் டிசம்பர் 19 அன்று நிறைவேற்றப்பட்டது.
  • அ.தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த சசிகலா மற்றும் அவரது கணவர் நடராசன் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை டிசம்பர் 19 அன்றும்,  மேலும் 2 பேரை டிசம்பர் 22 அன்றும் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதாக  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
  • பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சட்டமுன் வரைவு டிசம்பர் 21 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • மலேசிய விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக தமிழில் அறிவிப்புகள் வெளியாகும் என்று அந்நாட்டு அரசு டிசம்பர் 21 அன்று அறிவித்துள்ளது.
  • பல்வேறு கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே லோக்பால் சட்டமுன்வரைவு டிசம்பர் 22இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
  • ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக மரியானோ ரஜோய் டிசம்பர் 22இல் பொறுப்பேற்றுள்ளார்.
  • மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான அனுமதி டிசம்பர் 22 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
  • முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை ஓய்வுபெற்ற மேனாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினர் டிசம்பர் 24 அன்று ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *