(செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை)
29.9.2021 – அர்ச்சகர்கள் நியமன விவகாரம் – தமிழ்நாடு அரசுக்கு எதிராக சுப்பிரமணியன் சாமி வழக்கு.
30.9.2021 – திருப்பதி ஏழுமலையானுக்கு ஆகம முறையில் பூஜை நடக்கிறதா? – உச்சநீதிமன்றம் கேள்வி
30.9.2021 – தமிழ்நாட்டில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய ஆணையம் அனுமதி. புதிதாக 1650 இடங்கள் கிடைக்கும்.
1.10.2021 – வானொலி நிலையங்களை முடக்குவதா – ஆசிரியர் கி.வீரமணி எச்சரிக்கை.
1.10.2021 – இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.43 லட்சம் கோடி – நிர்மலா சீதாராமன்
2.10.2021 – கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பெரியார், இ.எம்.எஸ்.பற்றிய பாடம்!
2.10.2021 – கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் கேசவா கோயிலில் தலித் மக்கள் நுழைவுப் போராட்டம்.
3.10.2021 – தூய்மைப் பணியாளர்கள் இறந்தால் ஒன்றிய – மாநில அரசுகளே பொறுப்பு – மனித உரிமை ஆணையம்.
3.10.2021 – இந்தியாவில் 90 கோடி தடுப்பூசி டோஸ் போட்டு சாதனை.
3.10.201 – வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கினால் மற்ற பிரிவினருக்கு பாதிப்பில்லை – ராமதாஸ் பதில் மனு.
4.10.2021 – விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை; உத்தரப்பிரதேசத்தில் பதற்றம்.
4.10.2021 – மேற்கு வங்க சட்டமன்ற இடைத் தேர்தலில் மம்தா பவானிபூர் அமோக வெற்றி.
4.10.2021 – கோட்சேவை புகழ்கிறவர்கள் இந்தியாவை இழிவுப்படுத்துகிறார்கள்: வருண் காந்தி எம்.பி.
5.10.2021 – கர்நாடகத்தில் இந்துப் பெண்ணை காதலித்த முஸ்லிம் இளைஞர் கொலை : ராம்சேனா கும்பலிடம் விசாரணை.
11.10.2021 – நீட் தேர்வு கூட்டாட்சிக்கு எதிரானது; 12 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்.
6.10.2021 – 27 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் எந்தத் தடையும் பிறப்பிக்கக் கூடாது: உச்சநீதி மன்றத்தில் தி.மு.க. மனு.
6.10.2021 – வள்ளலார் பிறந்த தினம் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிப்பு: முதல்வர் அறிவிப்பு.
7.10.2021 – 500 கோடி மக்களுக்கு 2050ஆம் ஆண்டுக்குள் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் அய்.நா. எச்சரிக்கை.
7.10.2021 – திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களின் குற்றப் பின்னணி குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாக்குவாதம்.
8.10.2021 – இந்தியாவில் வறுமையில் உள்ள ஆறு பேரில் அய்ந்து பேர் தாழ்த்தப்பட்ட பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்: அய்க்கிய நாடுகள் வளர்ச்சிக் குழுமம் அறிக்கை.
8.10.2021 – உயர்ஜாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 சதவிகித இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பது எதன் அடிப்படை: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
8.10.2021 – பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு.
9.10.2021 – ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சண்டிகர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
9.10.2021 – கரோனா காலத்திலும் வாரிச் சுருட்டிய இந்திய பெரு முதலாளிகள், அதானிக்கு மட்டும் 200 சதவிகிதம் சொத்து உயர்வு.
10.10.2021 – ஓ.பி.சி. கணக்கெடுப்பு கோரி தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
10.10.2021 – உச்சநீதிமன்ற தலையீட்டால் உ.பி. விவசாயிகள் கொலை வழக்கில் பா.ஜ.க. அமைச்சரின் மகன் விசாரணைக்கு ஆஜர்.
11.10.2021 – ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்கம்.
11.10.2021 – அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் சிறையில் அடைப்பு.
12.10.2021 – உ.பி. விவசாயிகள் போராட்டத்தை இந்து – சீக்கியர் கலவரமாக மாற்ற சதி: எச்சரிக்கும் வருண்காந்தி
தொகுப்பு: சந்தோஷ்