செய்திக்கூடை

பிப்ரவரி 01-15
  • 19 ஆண்டுகளுக்குப் பிறகு, அய்.நா. பாதுகாப்பு சபையின் 2 ஆண்டுகள் தற்காலிக உறுப்பினர் பதவியில் இந்த ஆண்டு ஆகஸ்ட், 2012 நவம்பர் மாதங்களில் இந்தியா தலைமை ஏற்க உள்ளது.
  • தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் முன்னுரிமை அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
  • கிராம நிருவாக அலுவலர் (வி.ஏ.ஓ) தேர்வுகள் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
  • சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு.சி.ஜி) கொண்டு வந்துள்ள வழிமுறைகள் பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தினை, புத்த விகாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று புத்தர் கல்வி அறக்கட்டளை, அகில இந்திய எஸ்.சி. எஸ்.டி. கூட்டமைப்பு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
  • சென்னையில் உள்ள 16 சட்டசபைத் தொகுதிகளில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 900 வாக்காளர்கள் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
  • மாணவர்களை எல்.கே.ஜி யில் சேர்க்க நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது.
  • ரோடாரில் சிக்காத ஸ்டெல்த் எனப்படும் அதிநவீன போர்விமானத்தினை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *