ஆசாராம் சாமியார்
ஆசாராம் நீதிமன்றத்தில் வாதாடிய போது எடுத்துக்கூறிய விவாதம் குறித்த தகவல்களை சாட்சிகள் தரப்பு வழக்குரைஞர் வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று நீதிபதியிடம் ஆசாராம் கூறியதாவது:
“எங்களது கடவுள் கிருஷ்ணன் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் கூடியிருந்தார், அதை இந்துக்கள் தெய்வச்செயலாக பார்க்கிறோம், அதே போல்தான் நாங்களும். பிரம்மசொரூபமான சாதுக்களாகிய நாங்கள் பெண்களுடன் சேருவது தெய்வீகச் செயலுக்கு ஒப்பானதாகும், மக்கள் என்னை தெய்வமாகப் பார்க்கின்றனர். நான் மக்களுக்கான பல நல்ல செயல்களைச் செய்துள்ளேன், எனது இந்தச் செயலுக்கு என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் கூடும் லட்சக்கணக்கான மக்களே சாட்சிகளாக இருக்கின்றனர்.
என் மீது பாலியல் கொடுமை குற்றச்சாட்டு என்பது உண்மையோ அல்லது புனையப்பட்டதோ என்பது குறித்து எனக்குக் கவலையில்லை, நாங்கள் தெய்வீக சக்தி பெற்றவர்கள். எங்கள் மீது குற்றம் சுமத்துவதே அவசியமற்றது, மதநூல்களின் படி என்னைப்போன்ற சாதுக்கள் மீது விசாரணை நடத்துவதும், சிறையில் வைப்பதும் இந்துமதத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலே ஆகும். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்று கூறியதாகவும்….
அதற்கு நீதிபதி, “இங்கு மதம் தொடர்பான சொற்பொழிவுகள் கேட்க யாரும் வரவில்லை, அரசமைப்புச் சட்டத்தின் படி விசாரணை நடந்து வருகிறது, குற்றம் செய்தவர், யாராக இருந்தாலும் அரசமைப்பு சட்டத்தின் முன்பு சமமே! ஆகவே இது போன்ற கருத்துகளைக் கூறி நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று கூறினார்.