உணவகங்களில் பார்சல் உணவு இல்லையென்றால் இன்று பல இளைஞர்கள் பட்டினிதான். பொட்டலம் கட்டப்பட்ட உணவில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடல்நலனைப் பாதிக்கின்றன. பிளாஸ்டிக் பொருள்களால் தாள், உறைகள் செய்யப்படுவதால் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகமாகின்றன.
இந்த இரண்டிற்கும் தீர்வு கண்டிருக்கிறார்கள் சென்னை அய்அய்டி மாணவர்கள். இவர்கள் கண்டுபிடித்திருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு உணவுத்தாள்கள், பொட்டலம் கட்டப்பட்ட உணவுப் பொருள்களில் பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கின்றன. இதனால் விரைவாக உணவுப் பொருள்கள் கெட்டுப்போவதைத் தடுக்க முடியும். இந்த உணவுத் தாள் பயன்பாட்டினால் பிளாஸ்டிக் பயன்பாடும் குறையும். திடக்கழிவு மற்றும் உணவு மாசுபாடு ஆகிய இரு பிரச்னைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு கண்டிருக்கிறார்கள்.