தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதுபோல் தினம் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பயன்கள் உள்ளது. நெல்லிக்கனியினை சாப்பிடும்போது என்னென்ன நன்மைகள் என அறிவோம்.
கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, கல்லீரல் சிறப்பாக செயல்பட்டு, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் இது மஞ்சள் காமாலையைப் போக்கும்.
இதில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்டுகள், டாக்ஸின்கள் மற்றும் நுரையீரலை ப்ரீ – ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும். இதனால் சுவாசக் கோளாறுகள் வராமல் தடுக்கும். தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உண்ணும் உணவுகள் எளிதில் செரிக்கப்படுவதோடு, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சினைகள் நீங்கும்.
உடலில் தினமும் சேரும் நச்சுக்களை வெளியேற்ற அன்றாடம் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட வேண்டும். இதன் மூலம் உடலில் தீங்கு விளைவிக்கும் ப்ரீ – ராடிக்கல்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால், கருவுறுதலில் ஏற்படும் பிரச்சினையைத் தடுக்கலாம். அது மட்டுமின்றி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் மாதவிடாய் சுழற்சியும் சீராக்கப்படும்.
தினமும் சாப்பிடுவதால், உடலில் ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை வராமல் இருப்பதோடு, உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக செயல்படும். இதில் உள்ள வைட்டமின் – சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும். மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகளையும் நீக்கும்.
உடல் எடை குறைய…
கொள்ளு பருப்பில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதை ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். ஜலதோஷம் குணமாக கொள்ளு பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த, உறுப்புகளைப் பலப்படுத்தும். இதை அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவையும் குணமாகும்.
கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தி கொள்ளுப் பருப்புக்கு உண்டு. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் முதலில் அதைச் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம். உடலுக்கு அதிக வலுவையும் கொடுக்கக்கூடியது.
கொள்ளு சூப் சளியைப் போக்கும் குணம் வாய்ந்தது. எனவே, குழந்தைகளுக்கு சளி பிடித்தால், கொள்ளு சூப் வைத்துக் கொடுக்கலாம். இதை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.
அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.