“நாட்டில் நடைபெறுவது அரசியல் போராட்டமல்ல; ஆரியர் _ திராவிடர் போராட்டமே’’ என்றார் தந்தை பெரியார். பல தேர்தல்களிலும், அது நிரூபணம் ஆகியுள்ளது என்றாலும் -_ நடந்து முடிந்த தேர்தல் மேலும் அப்பட்டமாகவே
தெரிவித்துவிட்டது.
பார்ப்பனர் சங்கம் வெளிப்படையாகவே தீர்மானம் நிறைவேற்றி _ தி.மு.க. மீதான தங்களின் பாரம்பரிய எதிர்ப்பைக் காட்டத் தவறவில்லை. பார்ப்பனர் ஏடுகள் பச்சையாக தி.மு.க. எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தன.
விளைவு _ ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிராகவும், பார்ப்பனர் அல்லாத திராவிட இயக்கத்துக்கு வெற்றியாகவும் கம்பீரமாகத் தேர்தல் முடிவு வந்தது _ திராவிட இயக்க ஆட்சி மலர்ந்தது.
“திராவிடம் வெல்லும்!’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்த முழக்கமும், தேர்தல் முடிவுக்குப் பிறகு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், ‘நான் திராவிட மரபைச் சார்ந்தவன்’ என்று பதிவிட்டதும் எதைக் காட்டுகிறது? ஆரியர் _ திராவிடர் போராட்டத்தைத்தானே!