தோற்றது ஜோதிடம்!

மே 16-31 (2021)

தி.மு.க. தோல்வி காரணங்கள் குறித்து ‘வீரகேசரி’ என்ற இலங்கை ஏடு தி.மு.க.வின் ஜாதகத்தைப் பார்த்து தி.மு.க. தோல்வி அடைந்துவிடும் என்று தேர்தல் முடிவு வரும் (30.4.2021) இரு நாள்களுக்கு முன்பாக எழுதியது.

1. கலைஞரின் ஆளுமையை கட்சியால் நிரப்ப முடியவில்லை. நான்கு ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க முடியவில்லை. அது தி.மு.க.வின் தந்திரமின்மையையும், சக்தியின்மையையும் காட்டுகிறது.

2. மேல்மட்ட தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்றோர் சற்று தள்ளி இருந்தே பட்டும் படாமல் வேலை செய்கிறார்கள்.

3. பிரசாந்த் கிஷோரை நம்பி தன் பாரம்பரிய தேர்தல் ஸ்டைலை தி.மு.க. கைவிட்டது. அது தலைவர்கள், தொண்டர்களிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.

4. பிரசாந்த் கிஷோர் ஏதாவது மேஜிக் செய்வார் என்று பார்த்திருக்க, தலைமுடி மாற்றுதல், வயலில் போட்டோ, நாடகத்தனமான குறை கேட்பு என ஒரு விளம்பர கம்பெனி வேலைகளைத் தான் செய்தார். இறுதியில் நான் வெற்றி தோல்விக்கெல்லாம் பொறுப்பாளி இல்லை. ஆலோசகர்தான் என்று ஒதுங்கிக் கொண்டார்.

5. மோசமான வேட்பாளர் தேர்வு, கிஷோரின் வேட்பாளர் பட்டியல், மூத்த தலைவர்களின் வேட்பாளர் பட்டியல், ஸ்டாலின் அவர்களின் வேட்பாளர் பட்டியல், திருமதி துர்கா ஸ்டாலின் பட்டியல் என நான்கு பட்டியல்கள் உலா வந்தன. கவர்ச்சியில்லாத தேர்தல் அறிக்கை.

6. விபத்து நடக்கும் முன் கடைசி நொடியில் நடப்பது நடக்கட்டும் என்று பயத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்குவது போல தி.மு.க.வின் போக்கு இருக்கிறது. அதனால் இது மாறாத இறுதிக் கணிப்பு.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் 198 தொகுதிகளில் வெற்றி பெறும்’’ என்று அந்த ஜோதிட அறிக்கை கூறியுள்ளது.

அப்பட்டமான பொய்யும், அடிப்படையே இல்லாத ஜோதிடக் கணிப்பும் ஃபீஸ் போன பல்பாகிவிட்டது.

இதுதான் ஜோதிடப் பித்தலாட்டம் என்பது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *