ஹக் மெஹர் என்னும் தங்கள் சமூக வழக்கப்படி திருமணம் செய்வதற்கு வரதட்சணையாக பணம் மற்றும் நகைகளுக்குப் பதிலாக, பாகிஸ்தான் ரூபாயில் 1,00,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,600) மதிப்புள்ள புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கோரி ஆச்சரியப்படுத்தியுள்ளார் மர்தான் நகரத்தைச் சேர்ந்த நைலா ஷமல்.
தங்கம் அல்லது பணத்திற்குப் பதிலாக புத்தகங்களை ஏன் கேட்கிறேன் என்று இவர் விளக்கம் அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
“நம் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், நம்மில் பலர் விலை உயர்ந்த பரிசுகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஒரு புறம் என்றால்… நம் சமூகத்திலிருக்கும் தவறான பழக்கவழக்கங்களை அகற்ற வேண்டியது மறுபுறம். அதனால்தான் புத்தகங்களை வரதட்சணையாகக் கேட்டேன்.
நான் ஓர் எழுத்தாளர். நானே புத்தகங்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்றால் எப்படி..?’’ என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் நைலா ஷமல்.