மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [27]

ஏப்ரல் 1-15,2021

கல்லீரல் அழற்சி

 (Hepatitis)

கல்லீரல் அழற்சி (Hepatitis) : கல்லீரல் அழற்சி என்பது கல்லீரலில் ஏற்படும் வீக்கம் ஆகும். முன்னர் “தொற்றுக் கல்லீரல் அழற்சி’’ (Infections hepatitis) என்று அழைக்கப்பட்டது. A வைரஸ்  (Hepatitis A) எனப்படும் கிருமிகளால் ஏற்படும் கடுமையான நோய்த் தொற்றாகும். இது போலவே B தொற்று கல்லீரல் அழற்சி, C வகை,  D வகை,E வகை என அய்ந்து வகைகள் உள்ளன. பெரும்பாலும் வைரஸ்களால் ஏற்படும் நோயாக இருந்தாலும் மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட இந்நோய் ஏற்படக்கூடும். மது, நச்சுப் பொருள்களும் இந்நோயை ஏற்படுத்தும். தன்னுடல் தாக்கு நோய்கள்  (Auto-Immune Disease) கூட கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும். கல்லீரல் அழற்சி தி வகை என்னும் ஒரு வகையும் உண்டு. வைரஸ்களால் ஏற்படும் இவ்வகையில் வைரஸ் கிருமிகளைக் கண்டுபிடிப்பது கடினமான செயல். இதுவன்றி, கல்லீரல் அழற்சி நி என்ற வகையும் உண்டு. இந்நோய் வைரஸ்கள் ஒன்றோடொன்று தொடர்பு அற்றவை. பல லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுதும் இந்நோய்களால் பாதிக்கப்பட்டாலும், ஒரு சிலர் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருப்பர்.

A  வகை கல்லீரல் அழற்சி: கல்லீரல் A வகை அழற்சி,HAV வைரஸ்களால் உண்டாகிறது. உணவு, நீர் போன்றவற்றில், மனிதக் கழிவுகள்  கலப்பதால் இந்நோய்த் தொற்று பரவுகிறது.

B வகை கல்லீரல் அழற்சி: HBV வைரஸ் என்று பெயர் உள்ள வைரஸால் இந்நோய் பரவுகிறது. உடல் நீர்மங்கள் (Body Fluids), இரத்தம், பெண்குறி சுரப்புகள், விந்து ஆகியவையே இந்நோய் பரவ முக்கியக் காரணிகள் ஆகும். நோயுற்றவர்களின் உடல் நீர்மங்களிலிருந்து இந்நோய் மற்றவர்களுக்குப் பரவுகிறது. நோயுற்றவர் பயன்படுத்திய ஊசியை பயன்படுத்துவதால், அவர்களோடு உடலுறவு கொள்வதால் இந்நோய் பரவுகிறது. உலகில் மூன்று கோடியே, அய்ம்பது லட்சம் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

C வகை கல்லீரல் அழற்சி: C வகை வைரஸ் தொற்றால் (HCV) இந்நோய் உண்டாகிறது.C வகை கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் இந்நோய், நோய்த் தொற்றுள்ளவர் பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்துவதாலும், உடலுறவு அவர்களோடு கொள்வதாலும் பரவுகிறது.

D வகை கல்லீரல் அழற்சி: டெல்டா கல்லீரல் அழற்சி என்றழைக்கப்படும் இந்நோய் D கல்லீரல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. HDV வைரஸ் என்றழைக்கப்படும் வைரஸால் உண்டாகும் இந்நோய், நோயுற்றவரின் இரத்தம் மூலம் பரவுகிறது. இது எளிதில் பரவாத ஒரு நோய். ஆனால், B கல்லீரல் அழற்சியோடு, இணைந்தே இந்நோய் பரவும். B வைரஸ் இல்லாதபொழுது, இது பல்கிப் பெருகாது.

E  வகை கல்லீரல் அழற்சி: நீர் மூலம் பரவும் E வைரஸ் (HEV) அசுத்தமான சுற்றுப்புறச் சூழலாலும், மனிதக் கழிவு கலந்த குடிநீரின் மூலமும் எளிதாகப் பரவும்.

நோய்த் தொற்று இன்றி வரும் கல்லீரல் அழற்சி:

மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, அதிகமாகும்போது, கல்லீரல் பாதிக்கப்படும். அதிகளவு மது அருந்துதல் கல்லீரலில் சிதைவை ஏற்படுத்துவதுடன், அழற்சியை ஏற்படுத்தும். ‘மது கல்லீரல் அழற்சி’  (Alcoholic Hepatitis) என்று இது அழைக்கப்படுகிறது. மது நேரடியாக கல்லீரல் செல்களைத் தாக்குகிறது. நாளாக, ஆக கல்லீரல் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது. அதனால், கல்லீரல் முழுமையாகச் செயலிழக்கும் நிலை ஏற்படும். அதனால் கல்லீரல் திசுக்கள் கெட்டிப்பட்டு, வடுக்கள் ஏற்படும். கல்லீரல் இழைநார் வீக்கம், காய வடு ஏற்படும் இந்நிலையை “கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்’’ (Cirrhosis) என்றழைக்கப்படுகிறது.

தன்னுடல் தாக்கு நோய்கள் (Auto Immune Diseases):

தன்னுடல் தாக்கு நோய்கள், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதித்து, கல்லீரலைத் தாக்குகிறது. இதனால் லேசான பாதிப்பு முதல், தீவிரமான பாதிப்பை கல்லீரலில் ஏற்படுத்துகிறது. ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாக இந்நோய் பெண்களைப் பாதிக்கிறது.

நோயின் அறிகுறிகள்: நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் ஆரம்ப நிலையில் பெரிதாக அறிகுறிகள் தெரியாது. கல்லீரல் செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும்பொழுதே அறிகுறிகள் தெரிய வரும். ஆனால், உடனடி அழற்சி, சட்டென்று தெரியும்.

*         களைப்பு

*          சோர்வு

 *        ஃப்ளூகாய்ச்சல் போன்ற அறிகுறிகள்

*           பசியின்மை

*           மஞ்சள் நிற சிறுநீர்

*           வெளிர்நிற மலம்

*           வயிற்று வலி

*           எடைக்குறைவு

*           மஞ்சள் நிறத்தில் தோல் நிறம் மாறுதல்

*          கண்களில் விழி வெண்படலம் மஞ்சள் நிறமாக மாறுதல்

*           நகக் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்

*         இதையே மஞ்சள் காமாலை (யிணீuஸீபீவீநீமீ) என்கிறோம். ஆனால், நாள்பட்ட கல்லீரல் அழற்சியில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் மெதுவாகத் தோன்றும்.

*          வயிறு வீக்கம்

*           உடல் வீக்கம்

போன்றவை நாள்பட்ட அழற்சியால் ஏற்படும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *