சிந்தனை: பா.ஜா.க என்பது பார்பனர் உயர்ஜாதியினருக்கு மட்டும் நடத்தப்படும் நிறுவனம்

மார்ச் 16-31,2021

மத்திய அரசின் அதிகாரமிக்க பதவிகளில் இணைச் செயலாளர் (Joint Secretary) என்று சொல்லக்கூடிய பதவியும் ஒன்று.

மாநில அளவில் சிறந்து செயலாற்றக்கூடிய IAS/IPS அதிகாரிகள், நன்றாகச் செயலாற்றும் IRS/IFS அதிகாரிகள் மட்டுமே இந்த இணைச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டில் பா.ஜ.க. அரசு இந்த இணைச் செயலாளர்கள் பதவியில் தனியார் துறை நிபுணர்களை நியமனம் செய்ய முடிவெடுத்தது. அதன்படி, 9 தனியார்துறை நிபுணர்கள் இந்த இணைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு.

1.            கோகோலி கோஷ்

2.            தினேஷ் ஜகடாலே

3.            ஆம்பர் துபே

4.            அருண் கோயல்

5.            ராஜிவ்  சக்சேனா

6.            சுஜித் பஜிபாயி

7.            சவ்ரப் மிஸ்ரா

8.            சுமன் பிரசாத் சிங்

9.            பூஷன் குமார்

இவர்கள் 9 பேரும் பார்ப்பன மற்றும் உயர்ஜாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

ஏற்கனவே, மொத்தம் இருக்கும் 275 இணைச் செயலாளர்களில் வெறும் 41 பேர் தான் BC, MBC, SC, STபிரிவைச் சார்ந்தவர்கள். மீதி இருக்கும் 234 பேரும் பார்ப்பனர் மற்றும்  உயர்ஜாதியினர் மற்றும் இதர பிரிவினர்.

ஒருபக்கம் அண்ணாமலை  IPS போன்ற  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகள், தற்சார்பு என்கிற பிராடு விஷயங்களுக்காக வேலையை விட்டு தாமாகவே விலகும்படி செய்யவைக்கப்படுகிறார்கள்.

மறுபுறம், அண்ணாமலைகளுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள், தனியார் துறையில் இருந்து உயர்ஜாதியினருக்கும் பார்ப்பனர்களுக்கும் தாரை வார்க்கப்படுகின்றன.

இப்படியே இது தொடர்ந்தால், பா.ஜ.க. ஆட்சியில், இந்தியா முழுமையும் 100% பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர் கையில் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏனெனில், பா.ஜ.க என்பது பார்ப்பனர் உயர்ஜாதியினருக்கு மட்டும் நடத்தப்படும் கம்பெனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *