காந்தியார் கடைசிக் காலத்தில் நானே திருப்தி அடையும் அளவுக்கு மாறினார். அவர் கடைசியிலே காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று, அவர் வாயினாலேயே சொல்லிப் போட்டார். நாம் எந்தக் காரியத்திற்காக காங்கிரஸ் ஏற்படுத்தினோமோ அந்த சுதந்திரம் வந்துவிட்டது. இனி காங்கிரஸ் தேவையில்லை என்று கூறினார்.
பிறகு கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி என்று கூறினார்¢ விஜயராகவாச்சாரி போன்றவர்கள் எல்லாம் அவரைக் கண்டித்தார்கள்.
அது மட்டும் அல்ல, அரசியலில் மதம் கூடாது. அரசாங்கக் காரியங்களில் மதத்தைக் கலக்கக் கூடாது என்ற துணிந்து கூறினார்.
இப்படி அவர் கூறி 53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
– 2.10.1968 அன்று கோவையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, ‘விடுதலை’ 28.10.1968