கவிஞர் கலி.பூங்குன்றன்
கேள்வி: ‘பெரியாரும், திராவிடமும்’ இல்லாமல் இருந்திருந்தால் பொங்கல் என்ற பண்டிகையே நமக்கு இருந்திருக்காது! என கி.வீரமணி பேசியுள்ளாரே?
பதில்: பொங்கல் பண்டிகையைக் கண்டுபிடித்து, பொங்கல் பானை வைத்து, சமைக்க பெண்களுக்குக் கற்றுக் கொடுத்து, பசு மாடுகளை வழிபடும் மாட்டுப் பொங்கலை விவசாயிகளைக் கொண்டாடக் கூறி, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பொங்கலைத் தமிழகம் முழுவதும் பரப்பியது திராவிடமும் பெரியாரும்தான். (‘துக்ளக்’ 10.2.2021 – பக்கம் 29)
பொங்கலை தமிழர்களுக்கான அறுவடைத் திருவிழா என்றும், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றும் பறைசாற்றியதும், நாடெங்கும் அவ்விழாவைப் பல்வேறு போட்டிகளுடன் கொண்டாடச் செய்ததும், பொங்கலுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பும் ஒரு வழக்கத்தை உண்டாக்கியதும், திராவிட இயக்க ஏடுகள் மலர் வெளியிட்டதும், எல்லாம் அறியாமலோ, அறிந்திருந்தும் அதை ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் இல்லாமலோ எழுதுவது – இந்தப் பார்ப்பனக் கூட்டத்தின் குருதிக் குமிழிகளிலேயே ஒன்றாகக் கலந்ததாகும்.
இயற்கை விழாவில் புராண சாக்கடையைக் கலந்து, இந்து மதப் பண்டிகை என்னும் சாயத்தைப் பூசிய கூட்டம்தான் இந்தப் பூசுரர் கும்பல்.
பொங்கலை ‘சங்கராந்தி’ என்று சமஸ்கிருத மயமாக்கியவர்கள் யார்? இந்த மனுவாதிக் கும்பல்தானே?
“சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தக்ஷிணாயனம்; ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப் பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியு-ருவாய் அதஞ்செய்திருந்தபடியால், அப்பசுக்களைக் கொண்டு, அப்புலியுருக் கொண்ட சக்தியை ஒட்டின நாள். இதனை மாட்டுப் பொங்கல் என்பர்.
இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தை மாதம் முதலில் அறுத்த, முதற் பயிரை மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின், அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற, கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கிராந்திக்கு முன்னாள் அவன் பெயரால் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தளை அவிழ்த்து விட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண் பொங்கல் எனவும் கூறுவர்.’’
இவ்வாறு புராணப் புழுதிச் சாக்கடையை தமிழர் விழாவாகத் திணித்தவர்கள் யார்?
‘விவசாயம் பாவத் தொழில்’ என்பதுதானே பார்ப்பன மனுதர்மத்தின் கூற்று?
“பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், இரும்பு கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு, பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ? (மனுதர்மம், அத்தியாயம் 10, சுலோகம் 84)
இதன் காரணமாகத்தானே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்தம் பண்பாட்டுத் திருவிழாவாக தனித்தன்மை வாய்ந்த பொங்கல் திருநாளை – அதற்குச் சம்பந்தமேயில்லாத வகையில் ‘சங்கராந்தி’ என்று பார்ப்பனப் புராண மயமாக்கி தங்கள் வசம் திருப்பிக் கொண்டது யார்?
இந்த ஆரியப் பித்தலாட்ட விலங்கிலிருந்து மீட்டு, தமிழர்தம் திருவிழா என்று பொங்கலை நிலைநிறுத்தியது தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும்தான் என்ற உண்மையை எடுத்துக் கூறினால், குருமூர்த்தி பார்ப்பனருக்குக் குருதி கொதிக்கிறது! ஆமாம். திராவிட இயக்கம்தான் பொங்கல் பானையை வைத்தது, பொங்கல் சமைக்கப் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்தது என்று நையாண்டி செய்து, அதன் உண்மைத் தன்மையை உருமாற்றப் பார்க்கிறது பார்ப்பனியம்.
1921ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் வடுவூரில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்தச் சமயம் சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்கு காணிக்கை செலுத்த முன்வந்தார்கள். ஆனால், சங்கராச்சாரியாரோ, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.
அந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள்.
“கொடுமையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப் பெறுவதே ஒரு சிறப்புதான். அதை வரவேற்க வேண்டும்.’’ (ஆதாரம்: ‘தமிழ்நாட்டில் காந்தி’, பக்கம் 378) என்று சங்கராச்சாரியாரையும், அவர் சார்ந்த பார்ப்பன சமுதாயத்தையும் மானங்கெட விமர்சித்தார் காந்தியார்.
விவசாயம் குறித்து சங்கராச்சாரிகள் முதல் பார்ப்பனர் வரை கேவலமான கருத்து இருக்கும் நிலையில், தமிழர்களின் திருவிழாவை – அதன் தனித்த தன்மையிலிருந்து தலைகீழாகப் புரட்டிய ஏற்பாடுதான் புரோகித கூட்டத்தின் புராண திருகுதாளம் சங்கராந்தியாகும்.
மனிதர்களையே கொன்று யாகம் (புருஷயஜ்ஞ யாகம்) நடத்தியவர்கள் பார்ப்பனர்கள். குதிரைகளைக் கொன்று அசுவமேத யாகம் நடத்திய கூட்டம் இந்த ஆரியக் கூட்டம். இந்த லட்சணத்தில் மண் வெட்டி, கலப்பையைக் கொண்டு பூமியை உழுவதால், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களை வெட்ட நேரிடுகிறதாம் – அதனால்தான் பயிரிடுதலை மேலான தொழில் என்று இந்தப் பூணூல் மேலோர் கருதுவதில்லையாம்.
ஆனால், அந்தப் பாவத் தொழிலான விவசாயத்தின் விளைச்சலை – பச்சரிசியை – அக்கார அடிசிலைத் தாட்டிலே போட்டு, தலை வாழை இலை முன் சாஷ்டாங்கமாக அமர்ந்து நெய்யும் பருப்பும் கலந்து நக்கு நக்கு என்று நக்கி (அப்படித்தானே அவாள் சாப்பிடுவாள்!) தொப்பையை நிரப்புவதில் மட்டும் குறைச்சல் இல்லை! எதிலும் இரட்டை வேடம் – இரட்டை நாக்கு!
இத்தகைய போக்கினால் பார்ப்பன எதிர்ப்புணர்வு கூர்மைப்படுவதைப் புரிந்து கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தான மேனாள் திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யர், சேலத்தில் 9.3.1946 அன்று நடைபெற்ற பார்ப்பனர் மாநாட்டில் 19 விடயங்களைப் பார்ப்பனர்களுக்கு அறிவுரையாகக் கூறினார்.
அவற்றுள் ஒன்று – “பழைய பெருமையை மறந்து புதிய உலகத்திற்கேற்ப நடந்து கொள்ள பிராமணர்களே உங்களுக்கு விருப்பமில்லையேல், இம்மாநாடு இக்கணமே கலைந்துவிடலாம். நகத்தில் மண் படாமல் வாழும் பழைய வழக்கத்தை விட்டு விவசாயம், கைத்தொழில் முதலிய துறைகளில் புகுந்து செயலாற்றுங்கள்’’ என்று குருமூர்த்திகளுக்கு அப்போதே சர்.சி.பி.அய்யர்வாளும் புத்திமதி சொல்லியுள்ளாரே!
ஆனாலும் இந்த ‘ஜென்மங்கள்’ திருந்துவதாக இல்லை. அப்படியானால் பெரும்பாலான பார்ப்பனர்கள் அல்லாத மக்களின் மொத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாவது என்பது தவிர்க்கப்பட வாய்ப்பே இல்லை. இப்பொழுதே 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் பார்ப்பனருக்கு உள்ள இடம் ஒன்றே ஒன்றுதான். ஞாபகம் இருக்கட்டும்! குருமூர்த்தி கும்பல் ரொம்பவும் துள்ள வேண்டாம்!