நல்ல கல்வி அறிவுள்ளவர்: தொழில் ஆற்றலுள்ளவர்: பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்குப் பணம் சம்பாதித்திருப்பார். இதையெல்லாம் விட்டு பொதுத்தொண்டு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொதுமக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்கிற தன்னலமற்ற தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
– ஆசிரியர் கி. வீரமணி அவர்களைப் பற்றி தந்தை பெரியார்