கே: ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த அறிவுஜீவி என்கிற அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்துக்கு வலதுகரமா? உங்கள் கருத்து?
– முருகன், புழல்
ப: டில்லி காவி ஆதிக்கக் கட்சி டெபுடேசனில் (ஞிமீஜீணீவீஷீஸீ) அனுப்பியுள்ள இவருக்கான முகமூடி, அதிர்ச்சித் தாங்கி (ஷிலீஷீநீளீ ணீதீஷீக்ஷீதீமீக்ஷீ). பா.ஜ.க.வின் பிளேபேக் சிங்கர்.
கே: சமஸ்கிருதம் எந்த மாநிலத்திலுமில்லை, மக்கள் பேச்சு வழக்கிலுமில்லை. அப்படியிருக்க எல்லா மாநிலங்களிலும் செய்தி ஒளிபரப்புவது அசல் அடாவடித்தனம் அல்லவா?
– குமரன், குன்றத்தூர்
ப: திணிப்பு என்பதற்கு அப்பட்டமான பொருள் விளக்கம் இது! மக்கள் வரிப்பணத்தில் ஆரியம் தன் ஆக்டோபஸ் கொடுங்கரங்களை விரித்து ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை வெளிப்படையாக நிகழ்த்தும் பதவி அதிகார ஆணவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு!
கே: தபால் வாக்கு, தேர்தல் பணியாளருக்கு மட்டுமே உரித்தானது. அதை விரிவாக்கி மோசடி மூலம் வெற்றி பெற நினைப்பதை, சட்டப்படி தடுப்பது எப்படி?
– விசுவநாதன், மதுரை
ப: தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் என பல எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மக்கள் இயக்கமாகவும் அது மாற்றப்பட வேண்டிய அவசர அவசியம்.
கே: உ.பி. அரசின் மதமாற்றத் தடைச் சட்டம் – மதமறுப்பு மணங்களைத் தடுக்கும் மனித உரிமைக்கு எதிரான இச்சட்டம் எப்படிச் செல்லும்?
– அறிவுநம்பி, சேலம்
ப: ஏற்கனவே நீதிமன்றங்களின் கருத்து – தீர்ப்பு மதமறுப்புகளின்படி – அரசியல் சட்ட அடிப்படை உரிமை என்பதாலும் – அதனைப் பறிப்பது சட்ட விரோதம் என்பதால் – இச்சட்டம் செல்லுபடியாகாதே! நியாயம் – பிறகு எப்படியோ…! கே: ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா?
– மகிழ், சைதை
ப: மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு விஷயம் இது! இதில் மாநில அரசு ஈடுபடுவது – வரும் தேர்தலையொட்டிய வித்தை.
கே: நடைமுறைக்கு ஒத்துவராத ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தின் உள்நோக்கம் என்ன?
– முகமது, மாதவரம்
ப: வெளிப்படையானது – மாநிலங்களை ஒழிக்கும் ஒற்றை ஆட்சி – பாசிசம் படமெடுத்தாடுவதற்கான முன்னேற்பாடு!
கே: செம்மொழி ஆய்வு மய்யத்தை முடக்கும் முயற்சியை முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?
– கதிரவன், மாதவரம்
ப: வழமைபோல தமிழ்நாடு ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும்.
கே: சூரப்பாவுக்கு ஆதரவாய் கமலஹாசன் ஆவேசப்படுவது அறியாமைதானே?
– மணிகண்டன், வேலூர்
ப: ஒரு விசாரணைக் கமிஷன் – அதுவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் – நடைபெறுவதை அவர் ஏன் சரியாகப் புரிந்துகொள்ளாமல், ஆழந் தெரியாமல் காலை விட்டுள்ளார்? என்ன நிர்ப்பந்தமோ, என்ன அவசியமோ -நமக்கு தெரியாது! ஊழலுக்கு எதிராகக் குரல் ஒருபுறம்; மற்றொருபுறம் புகார்களையே விசாரிக்கக் கூடாது என்ற குரல். நகைமுரண் அல்லவா?
கே: தி.மு.க.வின் வெற்றியை ரஜினி எளிமைப்படுத்துவார் என்பது சரிதானே?
– ராஜசேகர், தருமபுரி
ப: முதலில் அவர் கட்சி ஆரம்பித்து கொள்கை என்னவென்று சொல்லட்டும். பிறகு கருத்தைக் கூறலாம். தன்னுடைய ரசிகர்கள் எவரையும் நம்பவில்லை அவர் என்பதே முதல் கோணல் – பிறகு…..?