Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அய்யாவே மூச்சு….!

பெரியாரை நம்படா நம்பு

அவர் பெயரைக் கேட்டாலே

வந்திடும் நெஞ்சினில் தெம்பு

பெரும்பாறை போலே

உன் பாதை மேலே

ஒரு கோடி தடைக்கற்கள்

கிடந்தாலும் கிடக்கும் நெம்பு

நெம்படா நெம்பு

தந்தை பெரியாரின் கைத்தடியைக் கொண்டு நெம்பு

நெம்படா நெம்பு

என்று ஊரெல்லாம் உலகெல்லாம்

ஒலித்திடும் மணி எங்கள் வீரமணி…!

தலைவர் வீரமணி…!

ஓயாமல் உறங்காமல்

உழைத்திடும் மணி

எங்கள் வீரமணி…!

தலைவர் வீரமணி…!

கால்சட்டை நாள்கொண்டே

கருஞ்சட்டை ஆனார்

நம்மைக் கரையேற்றும்

மேடைக்கே உரையாற்றப் போனார்

கவிதைக்கு நிகரான

கற்கண்டுப் பேச்சு…!

அய்யா கருத்தள்ளி

இவர் வீச

அணுகுண்டு வீச்சு…!

தொண்டுக் கிழவருக்கே

தொண்டு செய்துவாழும் மணி

நம் தூய தமிழ் கலைஞருக்கு

துணையிருக்கும் வீரமணி…!

தீண்டாமை இருள்நீக்க

தெருவெங்கும் போனார் – அய்யா

விரல் நீட்டும் திசையெல்லாம்

புயல் மூட்டலானார்

இன்றைக்கும் அய்யாவே

இவருக்கு மூச்சு – இவர்

தொண்டள்ளிப் புகழ்பாட

பறை கொஞ்சம் காய்ச்சு…!

– கவிஞர் அறிவுமதி