பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020

மார்ச் 16-31 2020

விதிமுறைகள்:

*  சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.

* எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.

*  சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் மார்ச் 31, 2020.

* வெற்றி பெற்ற சிறுகதைகளுக்கு புரட்சிக்கவிஞர் பிறந்தநாளான 2020 ஏப்ரல் 29 அன்று பரிசு வழங்கப்படும்.

* யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.

* எழுத்தாளரின் உண்மைப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். புனைப் பெயர் பயன்படுத்துவோரின் உண்மைப் பெயர் வெளியிடப்படாது.

* கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும்.

நிபந்தனைகள்:

* கதைகள் பகுத்தறிவு, சமூகநீதி, ஜாதி-மத ஒழிப்பு, பெண்ணுரிமை, முற்போக்குக் கருத்துடையனவாக இருக்கவேண்டும்.

* சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *