(ஒரு நாடகத் தொடர்)
சிந்தனைச் சித்ரா
மாண்பமை நீதிபதி நெடுஞ்செழியப் பாண்டியனின் விசாரணை நீதிமன்றத்தில் புது விசாரணை கோரியவர்களின் வாதங்களை கடந்த சில அமர்வுகளில் பார்த்தோம். இதோ அதன் தொடர்ச்சி:
காட்சி 5 – நீதிமன்றம் மீண்டும் கூடுகிறது
நீதிபதி நீதிமன்றத்திற்குள் நுழைந்து அவரது இருக்கையில் அமர்வதற்கு முன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தனர்.
நீதிபதி: சென்ற அமர்வில் வாதிட்ட வழக்குரைஞர் புத்தியானந்தா தன் வாதத்தைத் தொடரலாம்; அதன் பின் வழக்குரைஞர் குல்லூகபட்டர் தமது பதில் வாதத்தை முன்வைக்கலாம். இரு தரப்புக்கும் போதிய கால அவகாசத்தை இந்த நீதிமன்றம் அனுமதிக்கிறது.
புத்தியானந்தர்: நன்றி, கனம் நீதிபதி அவர்களே, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் துரோணாச்சாரியார் _ ஏகலைவன் நிகழ்வில் சமூக அநீதி கொடிகட்டிப் பறந்தது; ஏனென்றால், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பதுதான் மனுநீதி. அதனை அப்படியே அட்சரம் பிசகாமல் அமல்படுத்தியவர்கள் நமது அக்கால ஆட்சியாளர்களான அரசர்கள். மனுமுறை தவறாமல் ஆட்சி நடத்தியவர்கள் மறு பிறவியிலும் அரசராகவே பிறந்து வர முடியும் என்கிற அய்திகம் _ நம்பிக்கையால் உந்தப்பட்டு ஆட்சி செய்தவர்கள்.
நீதிபதி: அதெப்படி, தவறான, சூதும் சூழ்ச்சியும் நிறைந்த செயல்கள் மனித தர்ம சட்டப்படி மட்டுமல்ல; நியாயப்படி குற்றம் அல்லவா? தானே முயற்சி செய்து கற்ற வித்தை ‘தனுர்வித்யா’ என்கிற கல்வியைப் பறித்தது மிகப் பெரிய சமூக அநீதி. அது மட்டுமல்ல; கட்டை விரலை வெட்டிக் கொடுக்கக் கேட்டதும் அதைப் பெற்று மகிழ்ந்ததும் இ.பி.கோ.செக்ஷன் 326 முதல் 307 வரை கூறியுள்ளபடி பல்வகை குற்றங்களைச் செய்ததாகவே கருதிட வேண்டும்!
வழக்குரைஞர் குல்லூகபட்டர்: நோ மை லார்ட்! துரோணாச்சாரியார் இதில் எந்தக் குற்றமும் செய்யவில்லையே! ஏகலைவன், தானே முன்வந்து கட்டை விரலை வெட்டி குருவுக்கு தட்சணையாகத் தந்தான். இதற்கு அவர் எப்படி குற்றவாளியாவார்?
புத்தியானந்தர்: (எழுந்து குறுக்கிடுகிறார்) ‘மை லார்ட்! ஒரு முக்கிய கேள்வியை எதிர்க்கட்சி வக்கீலுக்கு நான் வைக்க விரும்புகிறேன். ஏகலைவனின் கட்டை விரலை வெட்டித் தரக் கேட்டு, அவனது பலவீனத்தை _ பக்தியை தந்திரமாக தனக்குச் சாதகமாக்கிடத் தூண்டியவர் துரோணாச்சாரியார் அல்லவா?
குற்றத்தைச் செய்தவரைவிட, தூண்டியவரின் குற்றம்தான் கடுமையான குற்றம். அக்கிரவேட்டட் அஃபென்ஸ் (கிரீரீக்ஷீணீஸ்ணீtமீபீ யீஷீக்ஷீனீ ஷீயீ ஷீயீயீமீஸீநீமீ)
குல்லூகபட்டர்: ஆட்சேபிக்கிறேன் மை லார்ட்!
நீதிபதி: அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்; மேலே உங்கள் வாதத்தைத் தொடருங்கள்!
புத்தியானந்தர்: இதை மட்டும் மண்டல் அவர்கள் தனது கமிஷனின் அறிக்கையில் குறிப்பிடவில்லை. ராமன் காட்டிலிருந்து திரும்பி, அயோத்தியில் ‘ராமராஜ்ய ஆட்சி நடத்தியபோது ஒரு நாள் ஒரு பிராமண குடும்பம், அவர்களின் இறந்த பிராமணக் குழந்தையுடன் ராஜதர்பாரில் நுழைந்து கூச்சலிட்டு, “அய்யோ! ஸ்ரீராமரே! உங்கள் ராஜ்யபாரம் சரியில்லை. என் குழந்தை அதனால் மரணம் அடைந்தது. தர்மம் எங்கு தவறுகிறதோ அங்கே இதுபோன்ற அலங்கோலங்கள் நடைபெறும் என்பது தர்மசாஸ்திரங்களில் கூறியுள்ள நடைமுறை’’ என்று கூச்சலிட்டபோது, ஸ்ரீராமன், “என்ன நடந்தது?’’ என்று கேட்க,
“இராமா, சூத்திரன் ஒருவன் _ சம்பூகன் என்னும் பெயருடையவன் கடவுளைக் காண தலை கீழாக நின்று பல நாள் தவம் செய்கிறான். இது மனுதர்ம சாஸ்திரத்துக்கு முழு விரோதம் அல்லவா?
மூடன் ஆனாலும், ஞானி ஆனாலும் சூத்திரனுக்குப் பிராமணனே தெய்வம். எனவே, எப்போது கடவுளைத் தொழ வேண்டும் என்று சூத்திரன் ஆசைப்பட்டாலும், அவன் பிராமணனைத்தான் தொழ வேண்டும் என்பதுதானே வேத சாஸ்திரங்கள் கூறிய கட்டளை – தர்மோபதேசம். அதை மீறியதால், என் குழந்தை மரணம் அடைந்தது. உங்கள் ராஜ்யத்தில் இப்படி மனு(வர்ண)தர்மம் மீறப்படலாமா’’ என்று பிராமணன் கூச்சலிட்டவுடன்,
ஸ்ரீராமன் வாளுடன் புறப்பட்டு சம்பூகன் தவம் செய்த இடம் நோக்கி விரைந்து சென்று பார்க்கிறார். அங்கே கண்ணை மூடி, தலைகீழாகத் தொங்கிப் பல நாள் தவம் செய்து ஆண்டவனையே பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் காட்சியைக் காணுகிறார்; வர்ணதர்மத்தை மீறி தவம் செய்த சம்பூகனை உடனே கண்டந்துண்டமாய் வெட்டினார். அவன் தலை கீழே உருண்டதும் பிராமணச் சிறுவன் உடனே உயிர் பிழைத்துக் கொண்டான்! என்று விளக்கியபோது, நீதிபதி குறுக்கிடுகிறார்.
நீதிபதி: என்ன இது? விசாரணையே இல்லாமல் இப்படி ஒரு கொடூரமான தண்டனை! சட்டப்படி, தரக்கூடாதே?
நானே கொலை நடந்ததைப் பார்த்தால்கூட, அந்த இடத்திலே தண்டனை தரமுடியாது. போதிய சாட்சியங்களை விசாரணை செய்துதானே தண்டனை கொடுக்க முடியும்? இயற்கைச் சட்டமும் அதுதானே! கோர்ஸ் ஆஃப் நேச்சுரல் ஜஸ்டீஸ் (சிஷீuக்ஷீsமீ ஷீயீ ழிணீtuக்ஷீணீறீ யிustவீநீமீ) அதுதான்! அப்படியிருக்க காலங்காலமாக இப்படி ஒருதலைச் சார்பான _ செயல்பாடுகள் நடைபெற்று வந்துள்ளமை கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது!’’
உடனே பதிவாளரை அழைக்கிறார் நீதிபதி நெடுஞ்செழியப் பாண்டியன்.
“பதிவாளர் அவர்களே, இதுபோல கொடுமையான காரியங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் யாரால் நடத்தப்பட்டிருந்தாலும்கூட அவர்களுக்கெதிராக வழக்கை இந்தக் கோர்ட்டே, தானே முன்வந்து விசாரணைக்குகந்தாக எடுத்துக்கொள்ள முடிவு செய்வதால், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவும்.
பதிவாளர்: சம்மன்களை எப்படி அளிப்பது என்பது சற்று குழப்பமாக உள்ளது!
நீதிபதி: இதிலென்ன குழப்பம்? நித்தியானந்தா என்னும் தேடப்படும் குற்றவாளி ஒரு பாலினக் குற்றவாளி. ‘கைலாயம்’ அமைத்து விசாரணை வழங்குகிறார் என்று விளம்பரப்படுத்துவதாக அன்றொரு வழக்கு வந்ததே, அந்தக் குற்றவாளியைப் பிடிப்பதற்குரிய முறைகளிலேயே நாமும் ஆணைகள் பிறப்பித்து, பழைய குற்றவாளிகளை நீதிமன்றங்கள் முன் கொணர்ந்து புது விசாரணையை விரிவாக நடத்த வேண்டும்!
வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. (கோர்ட் கலைகிறது)
(வாதங்கள் வளரும்…)