பெரியாரை அறிவோமா?

நவம்பர் 16-30

1.தோழர்கள் கொடுத்த உணவு மிகவும் காரமாகவும் மோசமாகவும் இருந்தால்கூட அந்த உணவை அந்தத் தோழர் முன்னிலையிலேயே உண்பதோடு மிகவும் நன்றாக உள்ளது எனப் பாராட்டுவார் பெரியார். ஏன்?

அ) அவருக்குப் பசி அதிகமாக இருந்ததால் ஆ) அன்போடு கொடுத்த தோழர்கள் மனம் மகிழ்ச்சி அடைய வேண்டுமென்பதற்காக இ) அதிகநேரம் வைத்திருந்தால் மேலும் கெட்டுவிடும் என்பதால். ஈ) மற்றவருக்கு உணவு கொடுக்கும் பழக்கத்தைத் தோழர்களிடம் வளர்க்க

2. ஈரோடு நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பெரியாரின் சமுதாய அந்தஸ்து என்ன?

அ) 29 பொது நிறுவனங்களில் பதவியில் இருந்தார். ஆ) சாதாரணக் குடிமகன் இ) ஆயிரம் வேலி நிலத்திற்குச் சொந்தக்காரர் ஈ) சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் கல் உடைக்கும் வேலை செய்தார்.

3. எனக்குப் பெண்டு பிள்ளை இல்லை; நான் செத்தால் எனக்காக அழக்கூடியவர் பெரியார் மட்டுமே என்று கூறியவர் யார்?

அ) காமராசர் ஆ) புலவர் கோ. இமயவரம்பன் இ) திரு.வி.க. ஈ) முத்துராமலிங்கத் தேவர்

4. காங்கிரஸ் கமிட்டிகள் தீண்டாமையை எதிர்த்து வேலை செய்யலாம் என்ற திட்டப்படி கேரளக் காங்கிரஸ் கமிட்டியின் நேர் பொறுப்பில் தொடங்கப்பட்ட போர் எது?

அ) கல்பாத்தி அக்ரகார நுழைவுப் போர் ஆ) வைக்கம் உரிமைப் போர் இ) அனைவரும் அர்ச்சகர் ஆகும் போர் ஈ) தாய்மொழியில் வழிபடும் உரிமைப் போர்

5. வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டத்திற்காகப் பணம் பெற்றமைக்குச் சரியாகக் கணக்குக் காட்டவில்லை என்று பெரியார்மீது குற்றம் சுமத்திய காங்கிரஸ்காரர் யார்?

அ) சி.என்.முத்துரங்க முதலியார் ஆ) வ.உ.சிதம்பரம் இ) தண்டபாணி பிள்ளை ஈ) சீனிவாச அய்யங்கார்

6. தமிழ்நாட்டில் கதர் இயக்கத்தைப் பலமடையச் செய்தவர் யார்?

அ) தந்தை பெரியார் ஆ) இராசகோபாலாச்சாரியார் இ) பனகல் அரசர் ஈ) கைவல்ய சாமியார்

7. 1922ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் ஈரோடு இல்லத்தில் தங்கிச் சென்ற காங்கிரஸ் தலைவர்…..

அ) பண்டித மோதிலால் நேரு ஆ) வித்தல் பாய் பட்டேல் இ) டாக்டர் அன்சாரி ஈ) மூவரும்

8. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் கருத்தைக் கேட்பதற்கு பெரியாரைக் காந்தி சந்தித்த இடம் எது?

அ) திருவனந்தபுரம் ஆ) அருவிக்குத்தி இ) பெங்களூர் ஈ) கொட்டாரம்

9. ………. எனது நினைவுக்கு வரும்பொழுதும், நேரில் காண நேரும்போதும், இது உலக இயற்கை அல்ல. எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதேயாகும் என்று முடிவு செய்வேன். பெரியாரின் இந்தக் கூற்றில் கோடிட்ட இடத்திற்கான சொற்றொடர் யாது.?

அ) முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டுவது ஆ) நிலப்பிரபுக்கள் பண்ணையாட்களை நடத்துவது இ) விதவைகள் விஷயம் ஈ) மேல்ஜாதியார் கீழ் ஜாதியாரை ஒடுக்குதல்

10. இளைஞர் மாநாடு, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடு, சங்கீத மாநாடு ஆகியவையும் சேர்த்து நடத்தப்பெற்ற சுயமரியாதை மாநாடு எவ்வூரில் நடைபெற்றது?

அ) செங்கல்பட்டு ஆ) விருதுநகர் இ) ஈரோடு ஈ) புதுச்சேரி

 

பெரியாரை அறிவோமா விடைகள்

1. ஆ

2. அ

3. இ

4. ஆ

5. அ

6. அ

7. ஈ

8. ஈ

9. இ

10. இ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *