மஞ்சை வசந்தன்
(சென்ற இதழின் தொடர்ச்சி…)
(23.1.2020) இரவு சேலத்தில் வரவேற்பு
ஈரோட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சாலை ஓரத்தில் இரவு உணவை முடித்து நள்ளிரவு 1:15 மணிக்கு சேலம் சிறீசாந்த் விடுதிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களை சேலம் தோழர்கள் வரவேற்றனர். பிறகு உறங்கச் சென்றார்கள்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை
சுயமரியாதை சங்க கூட்டம் சேலம் செவ்வாய்பேட்டை சுயமரியாதைச் சங்கம் உறுப்பினர்கள் கூட்டம் 24.1.2020 அன்று காலை 9:30 மணியளவில் சிறீசாந்த் விடுதி அரங்கில் பழனி புள்ளையண்ணன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது. தமிழர் தலைவர் அவர்கள் வழிகாட்டுதல் உரையாடல்களுடன் 10:00 மணிக்கு கூட்டம் நிறைவுபெற்றது.
பெத்தநாயக்கன் பாளையத்தில் வரவேற்பு
10:15 மணிக்கு சேலத்தில் புறப்பட்டு 11:00 மணிக்கு பெத்தநாயக்கன் பாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு தலைமையில் அனைத்துக் கட்சியினர் பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்றனர்.
கழகக் கொடியேற்றுதல்
பெத்தநாயக்கன் பாளையம் கடை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கழக இலட்சியக் கொடியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முற்பகல் 11:20 மணிக்கு ஏற்றிவைத்தார்கள். அங்கும் பொதுமக்கள் கூடி நின்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.
ஆத்தூர்
24.1.2020 நண்பகல் 12:30 மணிக்கு ஆத்தூர் ராமகிருஷ்ணா ரெசிடென்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை ஆத்தூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குடும்பத்துடன் சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.
மாலை 6:10க்கு விடுதியிலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேல் வாழ்விணையரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விடைபெற்றார்.
ஆத்தூர் பொதுக்கூட்டம் (24.1.2020)
ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6:20 க்கு வருகை தந்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாவட்டச் செயலாளர் நீ.சேகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் த. வானவில் தலைமையேற்றார். பெ.சோமசுந்தரம், சி.சுப்ரமணியன், விடுதலை சந்திரன், வெ. அண்ணாத்துரை, திவாகர், வீராச்சாமி ஆகியோர் முன்னிலையேற்றனர். உ.செல்வன் நன்றி கூறினார். 7:10 மணி முதல் 8:05 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய ஆசிரியர் அவர்களின் உரையை பெருந்திரளாக பொது மக்கள் கூடி கேட்டனர்.
எடைக்கு எடை நாணயம்
நீட் எதிர்ப்புப் பரப்புரை மேற்கொண்டு ஆத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆத்தூர் கழக இளைஞரணித் தோழர்களால் பொதுக்கூட்ட மேடையில் பொது மக்களின் வாழ்த்து-களிடையே எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. நாணயத்தைப் பெற்றுக்-கொண்ட ஆசிரியர் அவர்கள் எனது எடைக்கு மேலாக வழங்கப்பட்ட நாணயம் ரூ.16,000 திருச்சியில் இயங்கி வரும் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கப்படும் என அறிவித்தார்.
இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்
ஆத்தூர் பொதுக்கூட்ட மேடையில் தோழர் இளமாறன் அவர்கள் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களிடத்தில் விடைபெற்று இரவு 8:10க்கு கல்லக்குறிச்சி நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
கல்லக்குறிச்சியில் வரவேற்பு
ஆத்தூர் பொதுக்கூட்டம் முடிந்து கல்லக்குறிச்சிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 9:05க்கு மண்டலத் தலைவர் க.மு.தாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தோழர்கள் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.
கல்லக்குறிச்சி பொதுக்கூட்டம் (24.1.2020)
கல்லக்குறிச்சி மந்தவெளி பொதுக்கூட்ட மேடைக்கு 24.1.2020 இரவு 9:10 மணிக்கு வந்தடைந்தார் தமிழர் தலைவர் அவர்கள். மாவட்டச் செயலாளர் கோ.சா.பாஸ்கர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமையேற்றார். பொன்.ராமகிருஷ்ணன், க.மு.தாஸ், குழ.செல்வராசு, த.பெரியசாமி, து.சுந்தரராசன் உள்ளிட்டோர் முன்னிலை யேற்றனர். 9:15 மணி முதல் 10:00 மணி வரை தமிழர் ஆசிரியர் அவர்கள் 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார்கள். முத்துசாமி நன்றி கூறினார்.
பெரம்பலூரில் வரவேற்பு
6ஆவது நாள் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு 25.1.2020 மாலை 5:30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாலை 6:50 மணியளவில் பெரம்பலூர் மூன்று ரோட்டில் தி.மு.க பொறுப்பாளர் முகுந்தன் தலைமையில் தி.மு.க, தி.க, வி.சி.க தோழர்கள் பயனாடை அணிவித்து உணர்ச்சி மிக்க வரவேற்பு அளித்து இருசக்கர வாகனங்களில் முன்னே அணிவகுத்து சென்றனர்.
பெரம்பலூர் பொதுக்கூட்டம் (25.1.2020)
பெரம்பலூர் தேரடியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடைக்கு மாலை 7:00 மணிக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள், நகரத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையேற்றார் மண்டலத் தலைவர் காமராஜ் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ப.ஆறுமுகம், இரா.அரங்கராசன், சா.தங்கபிரகாசம், ஆதிசிவம், அண்ணாத்துரை, பெ.துரைசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர் 7:15 மணி முதல் 7:55 வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் “நீட்’’டின் அவலங்களை எடுத்துரைத்து உரையாற்றினார்-கள். அனைத்துக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கூடி நின்று உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். மு.விசயேந்திரன் நன்றி கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
பெரம்பலூர் பொதுக்கூட்டம் முடிந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்குக் கூடியிருந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து நீட் பரப்புரைப் பயண நோக்கங்களை விளக்கி பேட்டியளித்தார். அனைவரிடமும் விடைபெற்று இரவு 8:00 மணிக்கு அரியலூர் நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அரியலூர் பொதுக்கூட்டம் (25.1.2020)
25.1.2020 இரண்டாவது கூட்டம் அரியலூர் ஆயிரங்கால் மண்டப வீதியில் அனிதா நினைவரங்கத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்றார் மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் மண்டலத் தலைவர் சி.காமராசு, மண்டலச் செயலாளர் சு.மணிவண்ணன், இரத்தின.இராமச்சந்திரன் தங்க.சிவமூர்த்தி, சி.சிவக்கொழுந்து, பேராசிரியர் தங்கவேலு பொறியாளர் இரா.கோவிந்தராசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர் இரவு 8:50 மணிக்கு மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 9:05க்கு தொடங்கி 9:55 வரை 50 நிமிடங்கள் உரையாற்றினார், நீட் என்ற தேர்வால் அனிதா உள்பட நமது பிள்ளைகளை எத்தனை பேரை இழந்துள்ளோம்; நீட்டை விரட்டும் வரை நமது போராட்டம் ஓயாது. பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடத் தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்து உரையாற்றினார். பெருந்திரளாக மக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஒன்றியச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
இரவு வல்லத்தில் ஓய்வு
அரியலூர் கூட்டம் முடித்து இரவு 10:00 மணிக்கு தோழர்களிடம் விடைபெற்று புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பயணக் குழுவினர் இரவு 11:15 மணிக்கு தஞ்சை வல்லம் வந்தடைந்தனர்.
தோழர்கள் சந்திப்பு (26.1.2020)
26.1.2020 அன்று காலை 10:00 மணியளவில் தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து ஒக்கநாடு மேலையூரில் நடைபெறும் மன்னை நாராயணசாமியின் 100ஆம் ஆண்டு விழா, நீட் எதிர்ப்பு கிராமப்புற வட்டார மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி மகிழ்ந்தனர். அனைவரிடமும் விடைபெற்று முற்பகல் 11:00 மணிக்கு மயிலாடுதுறை நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (26.1.2020)
மயிலாடுதுறை தங்கும் விடுதியிலிருந்து மாலை 6:30 மணிக்குப் புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 6:40 மணிக்கு 7ஆவது நாள் முதல் கூட்டமான மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமைக்கப்பட்ட கூட்ட மேடைக்கு வருகை தந்தார். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் ச.மு.ஜெகதீசன், மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன் நகரத் தலைவர் சீனிமுத்து, நகரச் செயலாளர் அரங்க. நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை யேற்றார்கள். கழகத் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் வருகை தந்து நீட் பரப்புரைப் பயணத்தை தமிழர் தலைவர் மேற்கொள்வதன் அவசியம் குறித்து உரையாற்றினார். இரவு 7:00 மணி முதல் 7:55 மணி வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கவுரையாற்றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று உரையைக் கேட்டு விழிப்புணர்வு பெற்றனர். அனைவரிடமும் விடை பெற்று இரவு 8:00 மணிக்கு சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டார் ஆசிரியர். கா.அருள்தாஸ் நன்றி கூறினார்.
சிதம்பரம் பொதுக்கூட்டம் (26.1.2020)
சிதம்பரம் போல் நாராயணதெருவில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9:05 மணிக்கு தமிழர் தலைவர் வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் அன்பு. சித்தார்த்தன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சொ.தண்டபாணி, மாவட்டத் துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன் மாவட்ட இணைச் செயலாளர் சி.யாழ்திலீபன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கடலூர் மாவட்டச் செயலாளர் நா.தாமோதரன், மாவட்ட துணைச் செயலாளர் கா. கண்ணன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை யேற்றனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீட் பயணம் மேற்கொண்டுவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வாழ்த்திப் பேசினார். இரவு 9:20 மணி முதல் 10:00 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் நகர கழகத் தலைவர் கோவி.குணசேகரன் நன்றி கூறினார்.
இரவு புதுச்சேரியில் வரவேற்பு
26.1.2020 அன்று சிதம்பரம் கூட்டம் முடித்து பயணக் குழுவினருடன் புதுச்சேரி நோக்கி இரவு 10:05 மணிக்கு புறப்பட்டார் தமிழர் தலைவர், வழியில் கடலூரில் பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி இரவு உணவு முடித்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து நள்ளிரவு 12:30 மணிக்கு புதுச்சேரி அண்ணாமலை தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், இளைஞரணித் தலைவர் தி. இராஜா உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்றனர். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி சிதம்பரத்திற்கே வருகை தந்து தலைவரை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். இரவு 1:00 மணியளவில் ஓய்வெடுக்கச் சென்றார் தமிழர் தலைவர் அவர்கள்.
புதுச்சேரி பொதுக்கூட்டம் (27.1.2020)
27.1.2020 அன்று எட்டாம் நாள் பயணமாக மாலை 6:40க்கு அண்ணாமலை விடுதியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி அவ்வைத்திடல் சாரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6:45க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். புதுச்சேரி மண்டலத் தலைவர் இர. இராசா வரவேற்றார். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையேற்றார். மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் கோ. கிருஷ்ணமூர்த்தி, இரா. சடகோபன், கு. ரஞ்சித் குமார், ந. நடராசன், வீர. இளங்கோவன், லோ. பழனி, இரா. விலாசினிராஜ், அ. எழிலரசி, மு. ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை-யேற்றனர். மாலை 7:00 மணிமுதல் 7:55 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்கள். முதுகெலும்புள்ள புதுச்சேரி அரசையும் அதன் ஆற்றல்மிகு முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களையும் பாராட்டிப் பேசினார். புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் இறுதியாக சிறப்புரையாற்றினார். இளைஞரணித் தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.