நன்னாரி வேரை நீர்விட்டுக் கொதிக்க வைத்து, ‘டிக்காஷன்’ தயாரிக்கவும். இதை பால், சர்க்கரையுடன் சேர்த்து காலை, மாலையில் தேநீர், காஃபி இவற்றுக்கு பதிலாக அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் படிப்படியாகக் குறையும்.
5 அல்லது 6 பூண்டுப் பற்களை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்றாகக் காய்ச்சி, பூண்டுப் பற்களைச் சாப்பிட்டு விட்டு, அந்தப் பாலை தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தாலும் ரத்த அழுத்தம் விரைவில் குறையும்.
முருங்கை இலைச் சாற்றை தினமும் காலையில் 10 மில்லி வீதம் குடித்து வந்தாலும் ரத்த அழுத்தம் குணமாகும். தினமும் உணவில் வெங்காயம், பூண்டு, அவரைக்காய், முருங்கைக் கீரை ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால்,
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.